முட்டையை அபேஸ் செய்ய வந்த பெண்: பின்னிப்பெடலெடுத்த தாய் மயில்..வைரல் வீடியோ

Peacock Viral Video: மயிலுக்கு தெரியாமல் அதன் முட்டையை திருடிச்செல்ல திட்டமிடும் பெண்ணுக்கு மயில் கொடுத்த பதிலடியின் வீடியோ வைரல் ஆகி வருகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 12, 2023, 09:32 AM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் motivation4u__official என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.
  • இந்த வீடியோவுக்கு ஏராளமான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.
  • இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
முட்டையை அபேஸ் செய்ய வந்த பெண்: பின்னிப்பெடலெடுத்த தாய் மயில்..வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

இணையவாசிகளுக்கு விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோக்கள் மீது தனி ஈர்ப்பு உள்ளது. நாய், பூனை, யானை, மயில், காகம், பாம்பு, குரங்கு ஆகியவற்றின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் மிகவும் விரும்பி பார்க்கப்படுகின்றன. இவற்றில் நம்மால் நம்ப முடியாத பல அரிய விஷயங்கள நாம் காண்கிறோம்.

தாயன்புக்கு ஈடு இணை கிடையாது. அது மனிதர்களானாலும் சரி, விலங்குகள் மற்றும் பறவைகள் ஆனாலும் சரி, ஒரு தாய் தன் குழந்தைகள் மீது கொண்டிருக்கும் பாசத்தை அளவிட முடியாது. குழந்தையை ஒரு தாய் அக்கறையுடன் பார்த்துக்கொள்வது போலதான் விலங்குகளும் பறவைகளும் தங்கள் குட்டிகளையும் முட்டைகளையும் பார்த்துக்கொள்கின்றன. விலங்குகள் மற்றும் பறவைகளின் தாயன்பை விளக்கும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.

சமீபத்திலும் அப்படி ஒரு வீடியோ வெளிவந்துள்ளது. இதை பார்த்தால் நமக்கு ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் உள்ளது. முட்டையை திருட வந்த ஒரு பெண்ணுக்கு மயில்கள் பாடம் கற்பிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும் இதற்கு இணைய பயனர்கள் அதிக கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். 

திருட வந்த பெண்ணை தண்டித்த மயில்கள்

வீடியோவின் துவக்கத்தில் ஒரு மயில் மேடான ஒரு நிலப்பரப்பில் படுத்தவாறு இருப்பதை காண முடிகின்றது. அதன் அருகில் சில முட்டைகள் இருப்பதும் காணப்படுகின்றது. அப்போது அங்கு ஒரு பெண் வருகிறார். அவர் மயிலின் முட்டைகளை மடமடவென எடுக்கத் தொடங்குகிறார். மயில் நேராக பார்த்துக்கொண்டு இருக்க, பெண் முட்டைகளை வேகலமாக எடுக்கிறார். 

மேலும் படிக்க | ’யப்பா என்ன சுகம்’ சாலையில் மல்லாக்க படுத்த நாய் - என்ன ஆச்சு தெரியுமா? வைரல் வீடியோ

ஆனால் அவருக்கு ஒரு விஷயம் தெரியவில்லை. மற்றொரு மயில் இங்கு நடக்கும் அனைத்தையும் தொலைவில் இருந்து பார்த்துக்கொண்டு இருக்கிறது. அது நேராக பறந்து வந்து பெண்ணை தாக்குகிறது. இதை சற்றும் எதிர்பாராத பெண், அச்சத்தின் உச்சிக்கே சென்று விடுகிறார். மயிலின் தாக்குதலால் கதி கலங்கிய பெண் முட்டைகளை அப்படியே போட்டுவிட்டி தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி விடுகிறார். திருட்டுத்தனமாக மயிலின் முட்டைகளை எடுத்துச்செல்ல வந்த பெண்ணை தாக்கி மயில்கள் தங்கள் முட்டைகள் திருடப்படாமல் காப்பாற்றின. 

மயில் பெண்ணுக்கு கற்றுக்கொடுத்த பாடத்தை இங்கே காணலாம்: 

வீடியோ இணையத்தில் வைரல் ஆனது

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் motivation4u__official என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ஏராளமான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். இப்படி மனிதர்கள் மயில் முட்டைகளை திருடும் பல வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் பகிரப்படுகின்றன. இவற்றை பார்த்தால் பலருக்கு கோவம்தான் வருகிறது. மிருகங்களின் இயல்பான வாழ்வில் சில மனிதர்கள் இந்த வகையில் குறுக்கிடுவது பல வகையான தீய விளைவுகளை ஏற்படுத்துகின்றது. வாயில்லா ஜீவன்களான விலங்குகள் மற்றும் பறவைகளுக்கும் இந்த பூமியில் வாழ நம்மை போலவே, அதே அளவு உரிமை உள்ளது என்பதை நாம் கண்டிப்பாக புரிந்துகொண்டு, அவர்களது வாழ்வில் இடையூறு விளைவிக்காமல் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | பாத்திரங்களை பளபளக்க வைத்த குரங்கு, என்னமா சுத்தம் செய்யுது: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News