7th Pay Commission: அடுத்த வாரத்தில் வெளியாக இருக்கும் முக்கிய தகவல்!
2022 ஆம் ஆண்டில் இந்த பொருளாதார ஆண்டின் ஆகஸ்ட் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் டிஏ உயர்வு அறிவிப்பு வெளியிடப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த அற்புதமான மாதம் வந்துவிட்டது, ஆகஸ்ட் மாதத்தில் ஊழியர்களுக்கு டிஏ உயர்வு கிடைக்கப்போவதாக பல்வேறு செய்திகள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே வந்தது. தற்போது ஆகஸ்ட் மாதம் தொடங்கிவிட்ட நிலையில் 7வது சம்பள கமிஷன் டிஏ உயர்வு அடுத்த வாரத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை அடுத்த வாரம் மத்திய அரசு அறிவிக்கலாம் என்று ஊழியர்கள் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். இந்த 2022 ஆம் ஆண்டில் இந்த பொருளாதார ஆண்டின் ஆகஸ்ட் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் டிஏ உயர்வு அறிவிப்பு வெளியிடப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 8th Pay Commission: அடித்தது ஜாக்பார்ட்! இரட்டை ஊதியம் மற்றும் சம்பள உயர்வு!
தற்போது டிஏ உயர்வு குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட்டான செய்திகள் அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்காக இத்தனை நாட்களாக ஆவலுடன் காத்திருந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு இது மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாக அமைந்திருக்கிறது. அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (ஏஐசிபிஐ) எண்களின் தரவுகள் கணிப்பின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத டிஏ உயர்வு கிடைக்கப்பெறும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இதற்கு முன்னர் அதிக எண்ணிக்கையிலான 5 அல்லது 6 சதவிகிதம் கூட டிஏ உயர்வு அவர்களுக்கு கிடைக்கப்பெறலாம் என்றும் சில யூகங்கள் வெளியானது, ஆனால் இந்த 4 சதவிகித டிஏ உயர்வே இறுதியாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
மேலும் மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதனால் அரசு அந்த 18 மாத நிலுவைத் தொகையையும் சேர்த்து தொழிலாளர்களின் வங்கிக் கணக்குகளிலும் டெபாசிட் செய்ய வாய்ப்பு உள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஊழியர்களுக்கு இந்த 18 மாத காலத்திற்கான டிஏ நிலுவை தொகை உறுதியாக கிடைக்குமா என்பதற்கான செய்திகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் செய்தி, அகவிலைப்படியில் பம்பர் அதிகரிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ