7வது ஊதியக் குழுவின் சமீபத்திய செய்தி: மத்திய அரசு ஊழியர்கள் அடுத்த கட்ட அகவிலைப்படி உயர்வை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.  அவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய பணவீக்கத் தரவுகளின் அடிப்படையில், 4 சதவிகித உயர்வு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 சதவிகித உயர்வு இருந்தால், அகவிலைப்படி 38 சதவிகிதம் வரை அதிகரிக்கும். இது மத்திய ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய உயர்வை ஏற்படுத்தும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அகவிலைப்படி அதிகரிப்புக்காக காத்திருப்பவர்கள் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டி இருக்கும். அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசு அறிவிப்பை வெளியிடும். 


அகவிலைப்படி உயர்வு: எவ்வளவு உயரும்? 


மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை முதல் 34 சதவீதத்திற்கு பதிலாக 38 சதவீத டிஏ மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. 


மேலும் படிக்க | 8th Pay Commission: புதிய சூத்திரத்தின் அடிப்படையில் ஊழியர்களின் சம்பளம் உயரும் 


அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு 129-க்கு மேல் உள்ளது. ஆகையால், இந்த ஆண்டு ஜனவரி மாதம் இருந்த அகவிலைப்படி அதிகரிப்பைக் காட்டிலும் ஜூலை மாதத்திற்கான அகவிலைபபடி அதிகரிப்பு இன்னும் அதிகமாக இருக்கும். ஜனவரி மாதம் 3 சதவிகித அதிகரிப்பு இருந்தது. இப்போது 4 சதவிகிதம் இருக்கும் என எதிர்பார்க்கபப்டுகின்றது. 


இந்த அகவிலைப்படி உயர்வு எப்போது அறிவிக்கப்படும், எப்போது அளிக்கப்படும் என்ற கேள்விக்கு, சமீபத்திய அறிக்கைகள் அளிக்கும் பதில் என்ன என்பதை இங்கே காணலாம்.


செப்டம்பர் மாதம் நவராத்திரியின் போது இதற்கான அறிவிப்பு வெளியாகலாம். உயர்த்தப்பட்ட சம்பளத் தொகையானது மத்திய அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்குகளுக்கு செப்டம்பர் 30-ஆம் தேதி செலுத்தப்படும் என்று எங்கள் இணை நிறுவனமான ஜீ பிசினஸ் ஹிந்தி தெரிவித்துள்ளது.


எதிர்பார்க்கப்படும் அகவிலைப்படி எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கீடுகளின்படி, ரூ. 31,550 அடிப்படைச் சம்பளம் உள்ள ஊழியர்கள் ஆண்டுக்கு ரூ.15,144 உயர்வு பெறக்கூடும். மறுபுறம், அதிகபட்ச வரம்பில் ரூ.56,900 அடிப்படை சம்பளம் உள்ளவர்கள் ஆண்டுக்கு ரூ.27,312 உயர்வை பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | ரூ. 96,000 வரை உயரப்போகும் அரசு ஊழியர்களின் சம்பளம்! முழு விவரம்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ