புதுடெல்லி: ஐம்பது லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும், இந்த ஆண்டு நிச்சயம் ஊதிய உயர்வு கிடைக்கும் என ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஜூலை மாதத்திற்குள் அகவிலைப்படி (Dearness Allowance -DA) 28 சதவீதம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அகவிலைப்படி (DA) அதிகரிக்கும்
அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) சமீபத்திய தரவுகளின்படி, 2021 ஜனவரி முதல் ஜூன் வரையிலான அகவிலைப்படி குறைந்தது நான்கு சதவீதம் அதிகரிக்கக்கூடும். மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) ஜனவரி 2021 முதல் நிலுவையில் உள்ளது.  இருப்பினும், டிஏ வழங்குவதை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் டிஏ உடன், ஜூலை 1 ம் தேதி அரசாங்கம் கொடுக்க உள்ளது.  இது தவிர, 2020 ஜனவரி முதல் ஜூன் வரை மூன்று சதவீதம், ஜூலை முதல் டிசம்பர் வரை நான்கு சதவீதம் என்ற அளவில் மத்திய அரசு  ஊழியர்களுக்கு அகவிலைப்படி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ALSO READ | உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற சிறந்த ஸ்மார்ட்போன்கள்; ஒரு அலசல்


 


இந்த அகவிலைப்படி,  17 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பேரழிவு காரணமாக ஜனவரி 1, 2020, 1 ஜூலை 2020 மற்றும் 1 ஜனவரி 2021 ஆகிய மூன்று  தவணை அகவிலைப்படிகள் நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


2020 மார்ச் மாதம், மத்திய நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், நாடாளுமன்றத்தில் கேட்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ஊழியர்களுக்கான அகவிலைப் படியை 4% உயர்த்த கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.  இது மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் 2020 ஏப்ரல் சேர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக பொது முடக்கம் அமல்பட்டுத்தப்பட்டு இடையில் இந்த தொகையைவழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும், ஜூன் 2021 வரை டிஏ மற்றும் டிஆரையும்  (Dearness Allowance -DA and Dearness Relief-DR) நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்தது என்றார்.


ALSO READ | 7th Pay Commission: ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 18 மாத DA, DR மொத்தமாக கிடைக்குமா..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR