புது டெல்லி: பாரதி ஏர்டெல் (Bharti Airtel) தனது ரூ .99, ரூ .129 மற்றும் ரூ 199 திட்டங்களின் சலுகைகளை விரிவாக்க முடிவு செய்துள்ளது. இப்போது இந்த திட்டங்கள் இந்தியாவில் பல பகுதிகளில் கிடைக்கும். முதலில் இந்த திட்டங்கள் அனைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் மட்டுமே கிடைத்தன. ஏர்டெல்லின் ரூ .99 திட்டம் இப்போது பீகார், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசாவிலும் கிடைக்கும். முன்னதாக இந்த திட்டம் கொல்கத்தா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், உ.பி. கிழக்கு, மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இடங்களில் கிடைத்தது. டெல்லி-என்.சி.ஆர், அசாம், பீகார், ஜார்க்கண்ட், மும்பை, வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஒடிசாவில் ரூ .129 மற்றும் ரூ 199 திட்டங்களை கிடைக்கும் என நிறுவனம் அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த திட்டங்கள் இந்த மாநிலங்களில் கிடைக்காது:
ஏர்டெல்லின் இந்த திட்டங்கள் ஆந்திரா, தெலுங்கானா, சென்னை, இமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் கிடைக்காது.


READ ALSO | JIO-க்கு இணையான ஏர்டெல்-ன் அதிரடி திட்டம்... பிரீமியம் ZEE5 சந்தா இலவசம்!!


ஏர்டெல் ரூ .99 திட்டத்தின் பயன்:
ஏர்டெல்லின் ரூ .99 திட்டம் 1 ஜிபி டேட்டா, எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற லோக்கல் மற்றும் எஸ்டிடி அழைப்பை வழங்குகிறது. இது தவிர, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் பயனர்களுக்கும் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் களம் 24 நாட்கள். பயனர்கள் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் (Airtel Xstream), விங்க் மியூசிக் (Wynk Music) மற்றும் ஜீ 5 பிரீமியம் (Zee 5) ஆகியவற்றிற்கு இலவச அணுகலைப் பெறுகிறார்கள்.


ரூ .129 திட்டத்தில் என்ன நன்மைகள் உள்ளன:
ஏர்டெல்லின் ரூ .129 திட்டத்தைப் பற்றி பேசினால், பயனருக்கு இந்த திட்டத்தில் 300 எஸ்எம்எஸ் கிடைக்கிறது. இது தவிர, பயனர்கள் ரூ .99 திட்டத்தில் உள்ள அதே சலுகைகள் இந்த திட்டத்திலும் கிடைக்கின்றன, இதில் 1 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு ஆகியவை அடங்கும்.


READ ALSO | ஜியோவை மிஞ்சிய வோடபோன்.. அதிரடி Double Data சலுகை - முழு விவரம்


ரூ 199 திட்டத்தின் சலுகைகள்: 
ஏர்டெல் தனது ரூ 199 திட்டத்தில் 24 நாட்கள் செல்லுபடியை வழங்குகிறது. இந்த திட்ட பயனருக்கு தினசரி 1 ஜிபி அதாவது 24 ஜிபி மொத்த தரவு கிடைக்கும். தினசரி 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் (Airtel Xstream), விங்க் மியூசிக் மற்றும் ஜீ 5 பிரீமியம் (Zee5 Premium) ஆகியவற்றிற்கான இலவச அணுகலும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.


READ ALSO | ஏர்டெல், ஜியோ, வோடபோன்-ஐடியா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு.. தெரிந்து கொள்ளுங்கள்