JIO-க்கு இணையான ஏர்டெல்-ன் அதிரடி திட்டம்... பிரீமியம் ZEE5 சந்தா இலவசம்!!

ஏர்டெல் புதிய ₹.289 ப்ரீபெய்ட் திட்டத்துடன் பிரீமியம் ZEE5 சந்தாவை வழங்குகிறது..!

Last Updated : Jul 8, 2020, 01:47 PM IST
JIO-க்கு இணையான ஏர்டெல்-ன் அதிரடி திட்டம்... பிரீமியம் ZEE5 சந்தா இலவசம்!! title=

ஏர்டெல் புதிய ₹.289 ப்ரீபெய்ட் திட்டத்துடன் பிரீமியம் ZEE5 சந்தாவை வழங்குகிறது..!

பாரதி ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஏர்டெல்லின் ₹.289 என்ற புதிய திட்டம் பிரீமியம் பேக் ZEE5 சந்தாவுடன் கிடைக்கிறது. மேலும், ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கும் ஒரு புதிய டாப்-அப் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏர்டெல்-ன் புதிய ₹.289 ப்ரீபெய்ட் திட்டம்....

ஏர்டெல்லின் ₹.289 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்யும் பயனர்களுக்கு பிரீமியம் ZEE5 சந்தாவை நிறுவனம் இலவசமாக வழங்குகிறது. இதனால், பயனர்கள் ZEE5 பயன்பாட்டில் உள்ள அனைத்து பட்டியலையும் இந்த திட்டத்தின் பயனர்கள் அணுகலாம். அதாவது, இதன் மூலம் ZEE5 பயன்பாட்டில் உள்ள அனைத்து மொழி திரைப்படங்களையும் நீங்கள் இலவசமாகப் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த திட்டம் ஒரு நாளைக்கு 1.5 GB டேட்டாவை வழங்குகிறது. இந்த பேக் ஒரு நாளைக்கு 100 SMS நன்மையை வழங்குகிறது. கூடுதலாக, ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளின் ஒரு பகுதியாக வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் உள்ளடக்கம் மற்றும் விங்க் மியூசிக் சந்தாவுக்கான அணுகலையும் ஏர்டெல் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த ரூ.289 திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் வருகிறது.

READ | 199 ரூபாயில் ஒவ்வொரு நாளும் டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் - முழு விவரம்

இதை தொடர்ந்து, ஏர்டெல் தனது பட்டியலில் ₹.79 என்ற புதிய திட்டத்தையும் சேர்த்துள்ளது. இந்த திட்டம் உங்களுக்கு முழு ZEE5 பட்டியலில் உள்ள அனைத்து நன்மைகளையும் அடங்கிய 30 நாள் சந்தாவை வழங்குகிறது. ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாட்டில் உள்ள டிஜிட்டல் ஸ்டோர் பிரிவு மூலம் அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும் இந்த திட்டம் டாப்-அப் செய்யக் கிடைக்கிறது.

ஆபரேட்டர் தனது பிளாட்டினம் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு 4G வேகத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. ஏர்டெல் தேங்க்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக, ₹.499 மற்றும் அதற்கு மேற்பட்ட திட்டங்களில் உள்ள அனைத்து போஸ்ட்பெய்ட் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் பிளாட்டினம் அங்கீகாரத்தை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News