ஏர்டெல், ஜியோ, வோடபோன்-ஐடியா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு.. தெரிந்து கொள்ளுங்கள்

ஊரடங்கு காரணமாக யாரும் வெளியே வரமுடியாத நிலையில், வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அறிவிக்கப்பட்ட சலுகைகள் தற்போது நிறுத்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 7, 2020, 12:48 PM IST
ஏர்டெல், ஜியோ, வோடபோன்-ஐடியா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு.. தெரிந்து கொள்ளுங்கள் title=

புது தில்லி: ஊரடங்கு காலத்தின் போது, ​​கிட்டத்தட்ட அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்கள் பயனர்களுக்கு கூடுதல் இலவச சலுகைகளை வழங்கின. இருப்பினும், ஆரஞ்சு மற்றும் சிகப்பு மண்டலங்களில் உள்ளவர்களுக்கு இப்போது நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் இலவச சலுகைகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது என்று நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. 

மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிய பிறகு, அருகில் இருக்கும் உள்ளூர் கடைகளில் ரீசார்ஜ் செய்ய முடியும் என்பதால், நிறுவனங்களின் சார்பாக அவர்களின் கட்டணத் திட்டங்களில் செல்லுபடியாகும் நாட்கள் இனி அதிகரிக்கப்படாது. ஊரடங்கு காலத்தில் வழங்கப்பட்ட கூடுதல் செல்லுபடியாகும் நாட்கள் அல்லது இலவச சலுகைகள் இனி வழங்கப்படாது. 

மளிகை கடை-ஏடிஎம்மிலிருந்து ரீசார்ஜ் செய்யுங்கள்
ஊரடங்கு காரணமாக யாரும் வெளியே வரமுடியாத நிலையில், வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அறிவிக்கப்பட்ட சலுகைகள் தற்போது நிறுத்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளனர். ஏனென்றால், தற்போது ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளதால், பயனர்கள் இப்போது வெளியே சென்று ரீசார்ஜ் எளிதாக செய்யலாம் என்று தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் கருதுகின்றனர். இதனால் வோடபோன்-ஐடியா, ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் வழங்கப்பட்டு வந்த சில சலுகைகளை நிறுத்த உளது. அதாவது எந்தவொரு கட்டணத் திட்டங்களின் செல்லுபடியாகும் காலம் இனி நீட்டிக்கப்படாது என்பதற்கான காரணம் 

இந்த நன்மைகள் கிடைத்தன:
இந்திய அரசாங்கத்தின் ஊரடங்கு அறிவிப்பின் முதல் வாரத்தில், தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர் திட்டங்களின் செல்லுபடியாகும் தன்மை ஏப்ரல் 14 வரை அதிகரிக்கப்பட்டது. இது பின்னர் மே 3 வரை நீட்டிக்கப்பட்டது. கூடுதல் அழைப்பை பயனர்களுக்கு வோடபோன்-ஐடியா மற்றும் ஏர்டெல் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன. அதே நேரத்தில், ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு 100 நிமிட இலவச அழைப்பு நேரத்தையும் அளித்து வந்தது. இப்போது இனி இந்த நன்மைகள் மேலும் வழங்கப்படாது.

Trending News