TikTok ban என்றும், எனவே ஊழியர்கள் தங்கள் சாதனங்களில் இருந்து அந்த செயலியை நீக்க வேண்டும் என்று அறிவுறுத்தி மின்னஞ்சல் அனுப்பிய Amazon.com, அது பிழை என்று தெரிவித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமேசானின் இந்த பின்வாங்கலுக்கான காரணம் என்ன என்பது உடனடியாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தை நன்கு அறிந்த ஒருவரிடம் இதைப் பற்றி பேசியபோது, அமேசான் நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகளுக்கு இந்த மின்னஞ்சல் பற்றிய தகவ்ல் தெரியாது என்று கூறினார்.


வெள்ளிக்கிழமையன்று TikTok video sharing app  தடை செய்யப்பட்டதாக Amazon.com Inc அறிவித்த சில மணிநேர இடைவெளியில், அது பிழையான மின்னஞ்சல் என்று சொல்லி தடை விதிப்பதில் இருந்து பின்வாங்கியது


சீன நிறுவனத்திற்கு சொந்தமான சமூக ஊடக தளமான டிக்டாக்கை தடை செய்வதைப் பற்றி ஆலோசிப்பதாகவும், இது குறித்து சீனாவிடம் பேசுவதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ அண்மையில் தான் தெரிவித்தார் என்பதும் நினைவுகூரத்தக்கது.


Read Also | Chingari-ல் சீனர்களுக்கு இடம் இல்லை; தெளிவுபடுத்தும் நிறுவனம்! 


டிக்டாக் மற்றும் அமேசான் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்த விவகாரம் குறித்து விவாதித்த பின்னர் இந்த தடை மாற்றப்பட்டது என்று டிக்டாக் நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த வார தொடக்கத்தில், டிக்டாக் செயலியை தங்களுடைய சாதனங்களில் இருந்து நீக்குமாறு  தனது ஊழியர்களுக்கு ஒரு குறிப்பை அனுப்பினார் Wells Fargo. 


"டிக்டாக்கின் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் மற்றும் நடைமுறைகள் பற்றிய கவலைகள் காரணமாகவும், கார்ப்பரேட்டுக்குச் சொந்தமான சாதனங்கள் நிறுவன வணிகத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதாலும், அந்த ஊழியர்களை அவர்களின் சாதனங்களிலிருந்து பயன்பாட்டை அகற்றும்படி நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்" என்று வெல்ஸ் பார்கோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


"எங்களை வெல்ஸ் பார்கோ தொடர்பு கொள்ளவில்லை, ஆனால் எங்கள் பயனர்களுக்கான தரவு பாதுகாப்பைப் பாதுகாக்க நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்குத் தெரியப்படுத்துவது எங்கள் கடமை. அதை நாங்கள் செய்திருக்கிறோம் " என்று டிக்டாக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


Read Also | மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில் 100 மின்னணு சார்ஜிங் நிலையங்கள்...


சீனாவை தளமாகக் கொண்ட பைட் டான்ஸ் நிறுவனத்தின் படைப்பு டிக்டாக். வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் தளங்களில், பயனர் தரவை கையாளுதல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து கடும் விமர்சனங்களுக்கு உட்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் தான் இந்தியா டிக்டாக் மற்றும் பிற சீன செயலிகளுக்கு தடை விதித்தது.


பயனர்களின் தரவுகள் அமெரிக்காவில் சேமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் ஒரு காப்புப் பிரதி (backup copy ) சிங்கப்பூரில் பாதுகாப்பாக இருப்பதாகவும் இந்த விஷயத்தை நன்கு அறிந்த ஒருவர், வெர்ஜீனியாவில் உள்ள தரவு மையத்தில் (Virginia-based data center) டிக்டாக்கின் பயனர் தரவுகள் Google Cloudஇல் சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்.


இந்த விவகாரம் குறித்து டிக்டாக் நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். Googleஐயும் இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக அணுக முடியவில்லை.


அமெரிக்காவில் டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்படுவதை பாம்பியோ தடுக்கவில்லை. அமெரிக்கர்கள் TikTok செயலியை பதிவிறக்கம் செய்வதைப் பற்றி கேட்டபோது ஃபாக்ஸ் நியூஸ் செய்தி முகமையிடம் பேசிய பாம்பியோ, ஸிடம் கூறினார்: "உங்கள் தனிப்பட்ட தகவல்கள், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கைகளுக்கு செல்வதில் ஆட்சேபம் இல்லாவிட்டால் பதிவிறக்கம் செய்யலாம்."


வெள்ளிக்கிழமை, குடியரசுக் கட்சியின் தேசியக் குழு டிக்டாக்கைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று Democratic National Committee (DNC) தனது கட்சியினரிடம் கேட்டுக்கொண்டது. இந்த விஷயத்தை நன்கு அறிந்த ஒருவரிடம் பேசியபோது, பிரச்சார ஊழியர்கள், தங்களது தனிப்பட்ட சாதனங்களில் டிக்டாக்கைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், பிரச்சாரப் பணிகளுக்காக தனி தொலைபேசி மற்றும் கணக்கைப் பயன்படுத்த வேண்டும் என்று கடந்த சில மாதங்களாகவே Democratic National Committee அறிவுறுத்துகிறது என்று தெரிவித்தார். இது குறித்த கேள்விக்கு டி.என்.சியின் செய்தித் தொடர்பாளர் உடனடியாக பதிலளிக்கவில்லை.


கடந்த ஆண்டு அமெரிக்க கடற்படை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மொபைல் சாதனங்களில் டிக்டாக்கை பயன்படுத்துவதற்கு தடை விதித்தபோது, இந்த செயலியானது  "சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்" கொண்டிருப்பதாகக் கூறியது.


கடந்த நவம்பரில், அமெரிக்க சமூக ஊடக செயலியான மியூசிகல்.லி (Musical.ly)யை டிக்டாக் உரிமையாளர் பைட் டான்ஸ் டெக்னாலஜி கோ (ByteDance Technology Co) 1 பில்லியன் டாலர் முதலீடு செய்தது தொடர்பாக தேசிய பாதுகாப்பு மதிப்பாய்வை அமெரிக்க அரசு தொடங்கியதாக கடந்த ஆண்டு முதன்முதலாக செய்தி வெளியிட்டது ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம்.


Read Also | Facebook: அரசியல் விளம்பரங்களை தடை செய்யுமா?


பாதுகாப்பு கவலைகள்


சீன நிறுவனம் என்பதன் அடிப்படையில் தனது நிறுவனம் தொடர்பான கவலைகளைத் தீர்ப்பதற்காக, பைட் டான்ஸ் தனது அதிகார மையத்தை சீனாவிலிருந்து மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் முன்னதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதற்காக டிக்டாக்கின் கார்ப்பரேட் கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்யவும் பைட் டான்ஸ் முயன்று வருவதாக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இந்த வாரம் தெரிவித்தார்.


ஆனால் கவலைகள் என்னவோ முன்பு போலவே தொடர்கின்றன. கடந்த மாதம், ஆப்பிள் அதன் iOS இயக்க முறைமையின் சோதனை பதிப்பை புதிய தனியுரிமை அம்சங்களுடன் டெவலப்பர்களுக்கு வெளியிட்டபோது, ​​டெவலப்பர்கள் டிக்டாக் செயலியானது, பயனர்களின் கிளிப்போர்டுகளிலிருந்து தரவை நகலெடுப்பதாக தெரிவித்தனர்.  ஒரு செயலியில் இருந்து மற்றொன்றுக்கு நகலெடுத்து ஒட்டும்போது தரவு தற்காலிகமாக சேமிக்கப்படுகிறது, அப்போது தரவு கசிவதாக கவலைகள் எழுந்துள்ளன.


இந்த அறிவிப்புகள் anti-spam feature என்ற அம்சத்தால் ஏற்பட்டவை, ஆனால் உடனடியாக இது முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்று டிக்டாக் கூறியது.


ஆப்பிள் நிறுவனம், தனது ஊழியர்கள் டிக்டாக் பயன்பாட்டை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.


Read Also | இந்திய இராணுவத்தால் தடைசெய்யப்பட்ட 89 ஆண்ட்ராய்டு, iOS செயலிகளின் பட்டியல்!!


சில அமெரிக்க semiconductor நிறுவனங்கள் டிக்டாக் மீது தடை விதிக்கத் தயங்குகின்றன, ஏனெனில் பைட் டான்ஸ் ஒரு சிறந்த வாடிக்கையாளர் என்று இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.


பெரிய நிறுவனங்களுக்கு பாதுகாப்பு சேவைகளை வழங்கும் சில நிறுவனங்கள், தங்க்ளது நிறுவனத்தின் நிர்வகிக்கப்பட்ட சாதனங்களில் தடைசெய்யப்பட்டுள்ள செயலிகளின் பட்டியலில் TikTokயும் சேர்த்துவிட்டன.


இனி TikTokஇன் எதிர்காலம் அமோகமாக இருக்குமா இல்லை அம்போவாகி விடுமா என்பது உலகளவில் பேசுபொருளாகிவிட்டது.