Facebook: அரசியல் விளம்பரங்களை தடை செய்யுமா?

அமெரிக்க தேர்தலுக்கு முன்னதாக ஃபேஸ்புக் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் அரசியல் விளம்பரங்களுக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 11, 2020, 12:13 PM IST
    1. உலகளவில் பரவியுள்ள தொற்றின் காரணமாக இந்த முறை தேர்தல் பிரச்சார முறைகளிலும் பல மாற்றங்கள் இருக்கும் என தெரிகிறது.
    2. ஆன்லைன் பிரச்சாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    3. ஃபேஸ்புக் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் அரசியல் விளம்பரங்களை தடை செய்ய பரிசீலித்து வருகிறது.
Facebook: அரசியல் விளம்பரங்களை தடை செய்யுமா? title=

நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல்கள் (American Elections) நடக்கவுள்ளன. கொரோனாவுக்கு (Corona) மத்தியில் இதற்கான ஏற்பாடுகளும் அங்கு நடந்து வருகின்றன. உலகளவில் பரவியுள்ள தொற்றின் காரணமாக இந்த முறை தேர்தல் பிரச்சார முறைகளிலும் பல மாற்றங்கள் இருக்கும் என தெரிகிறது. வழக்கத்தைப் போல வேட்பாளர்கள் ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்ய முடியுமா என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் ஆன்லைன் பிரச்சாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு முன்னதாக ஃபேஸ்புக் (Facebook) நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் அரசியல் விளம்பரங்களுக்கு (Political Ads) தடை (ban) விதிக்க பரிசீலித்து வருவதாக ப்ளூம்பெர்க் நியூஸ் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

ALSO READ: Facebook உள்நுழைவு சான்றுகளை திருடும் 25 செயலிகளை நீக்கும் Googleன் அதிரடி நடவடிக்கை

அரசியல் விளம்பர தடை குறித்து இன்னும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று அறிக்கை மேலும் கூறியுள்ளது. இது குறித்து ஃபேஸ்புக் (Facebook) நிறுவனத்திடன் விவரம் கேட்ட ஊடகங்களுக்கு இன்னும் அந்த நிறுவனம் எந்த வித அதிகாரப்பூர்வ பதிலையும் அளிக்கவில்லை. இதற்கு முன்னரும் பல்வேறு நாடுகளில் நடந்த தேர்தல்களில் ஒரு தலைபட்சமாக செயல்பட்டதாக ஃபேஸ்புக் (Facebook) உள்ளிட்ட சில சமூக வலைதளங்கள் மீது குற்றச்சாடுகளும் கேள்விகளும் எழுந்துள்ளன. இதைத் தவிர்க்கவும் ஃபேஸ்புக் (Facebook) நிறுவனம் இப்படிப்பட்ட முடிவை எடுப்பது குறித்து யோசிக்கலாம் என அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

ALSO READ: American Elections!! அமெரிக்காவில் அசத்தும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேதா ராஜ்

Trending News