Indian Railways:ரயில் பயணிகளே உஷார்.. இந்த முக்கிய விஷயங்களை மறக்காதீங்க
Indian Railways: சில விஷயங்களில் கவனமாக இருந்தால், பயணிகள் ரயில் பயணங்களை நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் அனுபவிக்கலாம்.
இந்திய இரயில்வே: இந்திய இரயில்வே இந்தியாவை இணைக்கும் ஒரு மிக முக்கியமான போக்குவரத்து அம்சமாக இருந்து வருகின்றது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் நாட்டின் பல்வெறு ரயில்களில் பயணிக்கிறார்கள். மக்கள் தொகை அதிகமாக உள்ள இந்தியா போன்ற ஒரு நாட்டில், ரயில் போக்குவரத்துக்கு ஒரு முக்கிய இடம் உள்ளது.
இந்தியாவிலும் அவ்வப்போது பல புதிய ரயில்கள் தொடங்கப்படுகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், ரயில்வேயில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனுடன், ரயில் பயணத்தின் போது சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். இல்லையெனில் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சில விஷயங்களில் கவனமாக இருந்தால், பயணிகள் ரயில் பயணங்களை நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் அனுபவிக்கலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொருட்களின் பாதுகாப்பு
ரயிலில் பயணிக்கும் போது எப்போதும் உங்கள் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் பொருட்களை ரயிலில் அங்கும் இங்குமாக வைக்க வேண்டாம். உங்கள் பொருட்களை உங்கள் இருக்கைக்கு அடியில் ஒரு இடத்தில் வைக்கவும் அல்லது உங்கள் பொருட்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையிலான ஒரு இடத்தில் வைக்கவும். பிறருடைய பொருட்களுடன் உங்கள் பொருட்களை கலக்காதீர்கள்.
உணவு ப்ரீ - ஆர்டர்
இந்திய ரயில்வே பெரும்பாலான ரயில்களில் உணவு சேவையை வழங்குகிறது. பயணிகள் பெரும்பாலும் இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ரயிலில் சாப்பிட வேண்டிய அவசியத்தை நீங்கள் உணர்ந்தால், நீங்கள் ப்ரீ ஆர்டர் செய்வது நல்லது. இது தவிர, இப்போது ஆன்லைனிலும் உணவை ஆர்டர் செய்யும் விருப்பம் கிடைக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், மக்கள் அதையும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், முடிந்தால், உங்களுடன் கூடுதல் உணவை வைத்துக் கொள்வது எப்போதும் நல்லது.
மேலும் படிக்க | Indian Railways: விளையாட்டுக்கு கூட இதையெல்லாம் செய்யாதீங்க... அப்புறம் ஜெயில் தான்!
ரயிலில் சங்கிலியை இழுக்க வேண்டாம்
ரயிலில் பயணிக்கும் போது, ஒரு விஷயத்தை மனதில் கொள்ளுங்கள். தேவையில்லாமல் ரயிலின் சங்கிலியை இழுக்காதீர்கள். தேவையில்லாமல் ரயில் சங்கிலியை இழுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். தேவை இல்லாமல் ஒருவர் செயினை இழுத்து அதனால் ரயொல் நிற்க நேர்ந்தால், அதனால் மற்ற பயணிகளும் சிரமத்தை சந்திக்க வேண்டி வருகிறது.
மொபைலை கவனித்துக்கொள்ளுங்கள்
ரயிலில் மொபைல் திருடும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், ரயிலில் பயணம் செய்யும் போது உங்கள் மொபைலை கவனித்துக் கொள்ளுங்கள். மொபைலை சார்ஜிங்கில் வைக்கும்போதும், ரயிலின் ஜன்னல் அல்லது கதவுக்கு அருகில் மொபைலைப் பயன்படுத்தும் போதும் மிகவும் கண்காணிப்புடன் இருப்பது அவசியமாகும்.
ரயில்களில் எதை எடுத்துச்செல்லலாம்? ரயிலில் எதை எடுத்துச் செல்லலாம், எதை எடுத்துச்செல்லக் கூடாது என்று உங்களுகுத் தெரியுமா? அதற்கான ஒரு விதி உள்ளது என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
- ஆசிட் கூடாது: ரயிலில் ஆசிட் அதாவது எந்த விதமான அமிலத்தையும் கொண்டு செல்ல முடியாது. அவ்வாறு செய்தால் அதற்கு நீங்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாக parcel.indianrail.gov.in இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கேஸ் சிலிண்டர்:பல நேரங்களில் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு கேஸ் சிலிண்டரை எடுத்துச் செல்ல ரயிலை ஒரு நல்ல வழியாகக் கருதுகிறோம். ஆனால் அப்படி செய்வது தவறு. ரயிலில் காலியாகவோ அல்லது நிரம்பியதாகவோ எந்த வகையான கேஸ் சிலிண்டரையும் எடுத்துச் செல்ல முடியாது.
- சமைக்கப்படாத சிக்கன்: இந்திய ரயில்வேயில் சமைக்கப்படாத இறந்த கோழிகளை எடுத்துச்செல்லவும் அனுமதி இல்லை. இறந்த கோழிகளால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இது பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். இவற்றால் பல நோய்களும் பரவக்கூடும்.
- பட்டாசு: பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ரயிலில் பட்டாசுகளை கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயிலில் யாராவது பட்டாசு எடுத்துச்சென்று பிடிபட்டால் அபராதம் கட்ட வேண்டி வரும். தற்செயலாக அல்லது தெரியாமல் பட்டாசு வெடிப்பதால் பயணிக்கும் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும் படிக்க | இந்திய ரயில்வே குறித்து நீங்கள் அறியாத ‘சில’ சுவாரஸ்ய தகவல்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ