Dates Farming: தண்ணியே வேண்டாம்! மரம் வச்சா போதும், வருசத்துக்கு ரூ 20 லட்ச லாபம்
Dates Farming: தண்ணீரே இல்லாமல் சாகுபடி செய்யும் பேரிச்சை மரங்களை வளர்த்து ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் வரை லாபம் சம்பாதிக்கும் இந்திய விவசாயிகள்
புதுடெல்லி: தோட்டக்கலையில் விவசாயிகளின் ஈடுபாடு அதிகரித்து வருகிறது. தோட்டக்கலை மூலம் பழங்கள் மற்றும் பூக்களை பயிரிட்டு விவசாயிகள் அதிக லாபம் ஈட்டி வருகின்றனர். ஒவ்வொரு சொட்டு தண்ணீருக்காகவும் ஏங்கும் ராஜஸ்தானின் பார்மர் மாவட்ட விவசாயிகள், தண்ணீரே இல்லாமல் சாகுபடி செய்யும் பேரிச்சை மரங்களை வளர்த்து ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் வரை லாபம் சம்பாதிக்கின்றனர்.
விவசாயத்தில் புதுமை
பாரம்பரிய வேளாண்மைத் தொழில், காலத்திற்கேற்ப நவீன முறைக்கு மாறுவதுபோல, விவசாயத்தில் புதுமை வந்தது. கடந்த ஆண்டு முதல் பார்மர் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரிச்சம்பழம் சாகுபடி செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். பார்மரில் சுமார் 2000 ஹெக்டேர் பரப்பளவில் பேரீச்சம்பழம் பயிரிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 கோடி ரூபாய் அளவுக்கு விவசாயிகள் சம்பாதிக்கின்றனர்.
மகசூல் & லாபம் அதிகம்
ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் உள்ள விவசாயிகள் கடந்த 8-10 ஆண்டுகளாக பேரிச்சம்பழம் பயிரிட்டு வருகின்றனர். அவர்கள்
பர்ஹி, மெட்ஜூல், குனேஜி வகைகளை பயிரிட்டனர். சுமார் 3 ஹெக்டேரில் பேரிச்சம்பழம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 20 லட்சத்துக்கும் மேல் வருவாய் ஈட்டி வருகின்றனர். 600க்கும் மேற்பட்ட பேரிச்சை மரங்கள் நடப்பட்டுள்ளன. இந்த முறை ஆறாவது மகசூல் செய்கின்றனர்.
மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் பேரிச்சம்பழம் சாப்பிடலாமா?
தண்ணீர் தேவையில்லை
பேரிச்சம்பழம் விவசாயம் என்பது தண்ணீர் வசதி குறைந்த பகுதிகளில் மிகவும் சிறப்பாக செய்யலாம். பார்மர் பகுதியில் உள்ள விவசாயிகள் 2009 இல் பேரீச்சம்பழம் பயிரிடும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினர். ஆரம்பத்தில் 11 விவசாயிகள் பார்மரில் 22 ஹெக்டேரில் பேரிச்சை பயிரை வளர்த்தனர்; 2013 இல் முதல் மகசூல் கிடைக்கத் தொடங்கியது.
தண்ணீர் பஞ்சம் உள்ள பாலைவனப் பகுதியில் உள்ள விவசாயிகளின் பழத்துக்கு சந்தையில் இருந்து கிடைத்த நல்ல வரவேற்பு, வர்களின் வருமானத்தை அதிகரிக்க வழிவகுத்தது.
நல்ல வருமானம் கிடைத்ததால், இப்பகுதியில் அதிகமான விவசாயிகளை பேரிச்சம்பழம் பயிரிடத் தூண்டியது. 2009 இல் 22 ஹெக்டேராக இருந்த பேரிச்சம்பழம் 2018 இல் 200 ஹெக்டேராக அதிகரித்தது; இப்பகுதியில் சுமார் 100 விவசாயிகள் பேரிச்சம்பழம் சாகுபடி செய்தனர்.
பாலைவனப் பகுதியில் ஈராக்கில் இருந்து 'பர்ஹி' வகையும், மொர்க்கோவில் இருந்து 'மைட்ஜுல்' வகையும் விளைகின்றன. 'பர்ஹி' வகை பேரிச்சை சிறந்ததாகக் கருதப்படுகிறது. தேனைப் போல இனிப்பான இந்த வகை பேரிச்சம்பழங்கள், 'தேன் பந்துகள்' என்று பொருள் தரும் honey balls என்று அழைக்கப்படுகின்றன.
மேலும் படிக்க | கோடையில் பேரிச்சம்பழம்: சாப்பிடலாமா கூடாதா? பக்க விளைவுகள் ஏற்படுமா?
பேரீச்சம்பழ வகைகள்
உலகம் முழுவதும் 3000க்கும் மேற்பட்ட பேரீச்சம்பழ வகைகள் உள்ளன. இருப்பினும், அனைத்தும் வணிகரீதியாக பயிரிடப்படுவதில்லை. காட்டு பேரீச்சம்பழங்களை உலகம் முழுவதும் காணலாம்.
காலநிலை
பேரிச்சை உற்பத்திக்கு காலநிலை மிகவும் முக்கியமானது. இது ஒரு நீண்ட கோடை, சூடான குளிர்காலம், பூக்கும் மற்றும் பழம்தரும் போது மழை இருக்கக்கூடாது, குறைந்த ஈரப்பதம் மற்றும் சூரிய ஒளி அதிகமாக இருக்க வேண்டும்.
1500 மீட்டர் உயர பேரிச்சை மரங்கள்
காட்டு பேரிச்சை மரங்கள் மிகவும் உயரமாக வளரும். அதிலும், அவற்றின் அதிகபட்ச உயரம் 1500 மீட்டர் என்பது ஆச்சரியமானது. மத்திய கிழக்கு பாலைவனங்களில் பேரீச்சம்பழம் மிக முக்கியமான பயிர்களில் ஒன்றாகும். பேரீச்சம்பழ சாகுபடிக்கு மண் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. அனைத்து தரப்பட்ட மண்ணிலும் பேரிட்சை வளரும்.
ஒரு பேரீச்சை மரம், தனது வாழ்நாளில் 10-25 கிளைகளை உற்பத்தி செய்யும். இது மெதுவான பெருக்கல் செயல்முறையாகும், ஆனால், நீண்ட கால அளவில் பெரிய அளவு மகசூலைக் கொடுக்கிறது.
மேலும் படிக்க | நீரிழிவை ஒழித்துக் கட்டும் நார் சத்து நிறைந்த ‘சில’ உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ