புதுடெல்லி: ஒவ்வொரு மனிதனும் வீடு, சுகாதாரம், கல்வி, திருமணம், குழந்தைகள் பராமரிப்பு பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்ய பணக்காரன் ஆக விருப்புகிறான்.  பெண்களும் சளைத்தவர்களா என்ன? கோடீஸ்வரி என்ற நிலையை சுலபமாக அடைய டிப்ஸ் உங்களுக்காக...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லட்சங்களில் சம்பாதிக்க வேலை செய்தால் மட்டும் போதாது, பணவீக்கத்தை (inflation) கருத்தில் கொண்டு சம்பளம் மற்றும் சேமிப்பு ஆகியவற்றை வழக்கமான அடிப்படையில் திட்டமிட வேண்டும். உங்கள் இலக்கு எவ்வளவு? எவ்வளவு பெற இலக்கு வைக்க வேண்டும்? 1 கோடியா?  2 கோடியா? கோடிகளில் ரூபாயை சேர்ப்பவது ஒருபுறம். அனைத்து வகையான அவசரத் தேவைகளுக்கும் பணம் இருக்க வேண்டுமல்லவா?


கொரோனா வைரஸ், நிதி நெருக்கடி என்றால் என்ன என்று கோடீஸ்வரர்களுக்கும் கோடி காட்டிவிட்டது. ஏராளமானவர்கள் வேலை இழந்துவிட்டனர், பலரின் சம்பளம் (salary) 50% அளவுக்கு குறைந்துவிட்டது. எனவே, முதலீடு செய்வதன் அவசியம் முன்பை விட இப்போது அனைவருக்கும் நன்றாகவே புரிந்திருக்கும்.  


இலக்கு வைப்பது நல்லது, ஆனால் கோடீஸ்வரராக மாறுவது எப்படி? நீங்கள் மாதந்தோறும் பெரிய தொகையைச் சேமிக்க வேண்டும், பின்னர் அதை நல்ல லாபம் கொடுக்க கூடிய வழிகளில் முதலீடு செய்யவேண்டும்.  இதில் ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் முதலீடு செய்யும் போது ரிஸ்க் எப்போதும் இருக்கும். ஆபத்து என்பது சில முதலீடுகளில் அதிகமாகவும் மற்றவற்றில் குறைவாகவும் இருக்கும்.


நிபுணர்களை அணுகியபோது அவர்கள் உதாரணத்துடன் கோடீஸ்வரர் ஆகும் வழிமுறைகளை தெரிவித்தனர்.


Also Read | வெறும் ₹.948-க்கு குடும்பத்தில் உள்ள அனைவருக்கு ‘Unlimited’ Data, Voice Call!!


10 ஆண்டுகளில் 2 முதல் 3 கோடி ரூபாய் (rupee) வரை வேண்டுமா? உதாரணமாக விகாஸ் என்பவர், 45 வயது என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் இதுவரை சேமித்த பணத்தை இவ்வாறு சேமித்திருக்கிறார். 


PPF – மாதம் 3000 ரூபாய்
Axis Long Term Equity Fund -1.2 லட்சம் ரூபாய்
SBI Focused Equity Fund - 3.5 லட்சம் ரூபாய் HDFC Smallcap Fund  - 40,000 ரூபாய்
MO Multicap Fund  40000 ரூபாய்
IDFC Focused - 40,000 ரூபாய்


10 ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய் என்ற இலக்கு தொகையைப் பெற, இந்த  தனது முதலீட்டை (investment) அதிகரிக்க வேண்டும் என்று ஃபினாலஜி (Finology) நிறுவனர் பிரஞ்சல் கம்ரா கூறுகிறார்.


“விகாஸ் என்பவரின் வயது மற்றும் முதலீட்டு விவரங்களின் அடிப்படையில் அவரது பங்கு நிதியின் மொத்த தற்போதைய முதலீட்டு மதிப்பு 5.9 லட்சம் ரூபாய். 13% வருடாந்திர வருவாயைக் கருதி, 10 ஆண்டுகளில் இது கிட்டத்தட்ட 20 லட்சம் ரூபாயாக அதிகரித்திருக்கும்.”


Also Read | 1.4 லட்சம் காலி இடங்கள், Dec 15 துவங்குகிறது ஆட்சேர்ப்பு செயல்முறை!!


“ஆகவே, மீதமுள்ள 10 ஆண்டுகளில் 80 கோடி ரூபாயாகக் கட்டியெழுப்ப, மொத்தமாக 26 லட்சம் ரூபாயை முதலீடு செய்ய வேண்டும். ஆனால் மொத்தமாக முதலீடு செய்வது நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களுக்குமுடியாது, எனவே ஆண்டுதோறும் 5 லட்சம் முதலீடு செய்ய வேண்டும்.” 


இந்த முதலீடு விகாஸ் செய்தவாறே பல்வேறு விதமாக செய்யலாம். இன்றைய சூழ்நிலையில் மியூட்சுவல் ஃபண்டில் பணத்தை முதலீடு செய்வது சரியாக தேர்வாக இருக்கும் என்று ஃபினாலஜி (Finology) நிறுவனர் பிரஞ்சல் கம்ரா கூறுகிறார்.


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR