வெறும் ₹.948-க்கு குடும்பத்தில் உள்ள அனைவருக்கு ‘Unlimited’ Data, Voice Call!!

வோடபோன் ஐடியா தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய ரூ.948 குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது..!

Written by - ZEE Bureau | Last Updated : Dec 12, 2020, 09:33 AM IST
வெறும் ₹.948-க்கு குடும்பத்தில் உள்ள அனைவருக்கு ‘Unlimited’ Data, Voice Call!!

வோடபோன் ஐடியா தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய ரூ.948 குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது..!

அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை ஈர்க்க ஒவ்வொரு நாளும் புதிய திட்டங்களை கொண்டு வருகின்றன. இதற்கிடையில் Vi (Vodafone-Idea) தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய ரூ.948 குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய குடும்ப போஸ்ட்பெய்ட் (Family Postpaid Plan) திட்டம் UP கிழக்கு வட்டத்தில் மட்டுமே கிடைக்கும். இது ரூ.699 மதிப்பிலான என்டர்டெயின்மென்ட் பிளஸ் தனிநபர் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும்.

ரூ.948 மதிப்பிலான குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டம் இரண்டு இணைப்புகளுக்கான ஆதரவுடன் வருகிறது. கூடுதல் இணைப்புக்கு ரூ.249 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த திட்டம் ஒரு மாத காலம் செல்லுபடியாகும். புதிய குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டம் முதன்மை இணைப்பிற்கான வரம்பற்ற தரவையும், இரண்டாம் நிலை இணைப்பிற்கான 30GB அதிவேக தரவையும் வழங்குகிறது. தரவு முடிந்ததும், இரண்டாம் நிலை பயனர்களுக்கு 1 GB-க்கு ரூ.20 வசூலிக்கப்படும்.

ALSO READ | Airtel vs Reliance Jio vs Vi: 56 நாட்கள் செல்லுபடியாகும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டம் எது!!

லோக்கல், STD மற்றும் தேசிய ரோமிங் ஆகியவற்றில் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் இரு இணைப்புகளுக்கும் மாதத்திற்கு 100 SMS மேலும், இணைப்புகளுக்கு இலவச Vi திரைப்படங்கள் மற்றும் TV சந்தா கிடைக்கும். ரூ.948 மதிப்பிலான குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டத்தில் அமேசான் பிரைம், ஒரு வருடத்திற்கு ZEE5 பிரீமியம் மற்றும் ஒரு வருடத்திற்கு Vi Movies & TV செயலி சந்தா ஆகியவற்றுடன் இலவச சந்தா கிடைக்கிறது.

இந்த பிராண்ட் முன்பு ரூ.1,348 மதிப்பில் RedX குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் இரண்டு இணைப்புகளுடன் வருகிறது, இதை இரண்டு குடும்ப உறுப்பினர்களுடன் பயன்படுத்தலாம். இது முதன்மை இணைப்பிற்கான வரம்பற்ற அதிவேக தரவையும், இரண்டாம் நிலை இணைப்புக்கு 30GB அதிவேக தரவையும் வழங்குகிறது.

ALSO READ | VI இன் 148 மற்றும் 149 ரீசார்ஜ் திட்டங்களின் சூப்பர் ஆப்பர் விவரங்கள்...

இரண்டாம் நிலை இணைப்பிற்கான தரவு வரம்பு தீர்ந்த பிறகு, பயனருக்கு 1 GB-க்கு ரூ.20 வசூலிக்கப்படும். இரண்டாம் நிலை இணைப்பிற்காக 50GB வரை டேட்டா ரோல்ஓவர் வசதியையும் நிறுவனம் வழங்குகிறது. இது அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் மாதத்திற்கு 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. இது ரூ.5,988 மதிப்புள்ள ஒரு வருட நெட்ஃபிலிக்ஸ் சந்தா, அமேசான் பிரைமுக்கு ஒரு வருட இலவச சந்தா, ரூ.9999 மதிப்புள்ள ஒரு வருடம் ZEE5 பிரீமியம் மற்றும் Vi மூவிஸ் & டிவி செயலிக்கு இலவச அணுகலை வழங்குகிறது.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News