SBI Amrit Kalash Deposit: நிலையான டெபாசிட் திட்டம் என்பது தொழில்முனைவோர், பெண்கள், இளைஞர்கள், மூத்த குடிமக்கள் என பல்வேறு தரப்பினரின் மிகவும் விருப்பத்திற்குரிய முதலீடாக உள்ளது. இதில், குறைந்த ரிஸ்க் மற்றும் சீரான லாபம் கிடைப்பதால்தான் இதன் மீதான ஈர்ப்பு அதிகமாக உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெபாசிட் திட்டம் என்பது வங்கிக்கு வங்கி மாறுபடும். டெபாசிட் திட்டங்களை வேறுப்படுத்துவதில், அதன் கால அளவும், அதன் மீதான வட்டி விகிதம்தான் முக்கியமான ஒன்றாகும். வங்கிகளில் அதிக வட்டியை கொடுக்கும் டெபாசிட் திட்டங்களின் மீதுதான் வாடிக்கையாளர்கள் நாட்டம்கொள்வார்கள். அந்த வகையில், பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் சிறப்பு நிலையான டெபாசிட் திட்டத்தை இங்கு காணலாம். 


அம்ரித் கலாஷ் டெபாசிட்


பாரத ஸ்டேட் வங்கி சிறப்பு நிலையான டெபாசிட் திட்டம் ஒன்றை கடந்த பிப்ரவரி 15 அன்று அறிமுகப்படுத்தியது. பாரத ஸ்டேட் வங்கியின் 'அம்ரித் கலாஷ் டெபாசிட்' என்ற சிறப்பு நிலையான திட்டத்தில் சேர இது கடைசி மாதமாகும். இதன் அதிக வட்டி விகிதம் 7.10% வரை உள்ளது. 



மற்ற நிலையான வைப்புத் திட்டங்களுடன் ஒப்பிடுகையில் நல்ல வட்டியைப் பெற, சிறப்பு வைப்புத்தொகை மார்ச் 31, 2023 வரை சந்தாவுக்குக் கிடைக்கும். இந்த திட்டம், 400 நாட்களுக்கு உள்நாட்டு மற்றும் என்ஆர்ஐ வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.


மேலும் படிக்க | Bank Holidays: ஏப்ரல் மாதம் எத்தனை நாள் வங்கிகள் இயங்காது?


அம்ரித் கலாஷ் வைப்புத்தொகை உங்களுக்கு எவ்வளவு வட்டி தரும்?


சிறப்பு நிலையான டெபாசிட் 7.10% வரை வட்டி வழங்குகிறது. இருப்பினும், கூடுதல் 0.50% மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும். ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் அவர்களுக்கு பொருந்தும் கூடுதல் வட்டி விகிதத்திற்கு தகுதியுடையவர்கள்.


அம்ரித் கலாஷ் வைப்புத்தொகையின் கீழ் எவ்வளவு TDS குறைக்கப்படும்?


எஸ்பிஐ அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, வருமான வரிச் சட்டத்தின்படி பொருந்தக்கூடிய விகிதத்தில் வரி விலக்கு ஆதாரம் (டிடிஎஸ்) இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


திட்டத்திற்கு நீங்கள் எவ்வாறு சர முடியும்?


சிறப்பு நிலையான டெபாசிட் திட்டத்திற்கு நீங்கள் விண்ணப்பிக்கக்கூடிய பல விருப்பங்கள் உள்ளன. வங்கி கிளை, இன்டர்நெட் பேங்கிங் (INB), YONO ஆகியவை மூலம் நீங்கள் இணைந்து கொள்ளலாம். வங்கி இப்போது 2 வருடங்கள் முதல் 3 வருடங்களுக்கும் குறைவான சிறப்பான டெபாசிட் திட்டங்களுக்கு 6.75% வட்டியில் இருந்து 7 சதவிதம்; 3 வருடங்கள் முதல் 5 வருடங்களுக்கும் குறைவாக உள்ள 6.25% முதல் 6.5% வரை வழங்குகிறது.


மேலும் படிக்க | வீடு வாங்க கடன் வாங்க போறீங்களா... பெண்களுக்கு குறைந்த வட்டி கொடுக்கும் வங்கிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ