Bank Holidays: ஏப்ரல் மாதம் எத்தனை நாள் வங்கிகள் இயங்காது?

Bank Holidays List: வருகிற ஏப்ரல் மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது, எந்தெந்த நாட்களில் வங்கிகள் இயங்கும் என்ற முழு விவரம் இதோ...

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 10, 2023, 11:25 AM IST
  • ஏப்ரல் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.
  • ரிசர்வ் வங்கி விடுமுறைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
  • வங்கி கிளைக்குச் செல்வதற்கு முன் முழுமையான பட்டியலைச் சரிபார்க்கவும்.
Bank Holidays: ஏப்ரல் மாதம் எத்தனை நாள் வங்கிகள் இயங்காது? title=

வங்கி விடுமுறை பட்டியல்: நடப்பு நிதியாண்டு 2022-23 முடிய உள்ளது. மார்ச் 31 க்குப் பிறகு, ஏப்ரல் 1 முதல் தொடங்கும் 2023-24 புதிய நிதியாண்டில் சில பெரிய மாற்றங்கள் நிகழ இருக்கிறது. இந்த மாற்றங்கள் நேரடியாக பணம் மற்றும் வங்கிகளுடன் தொடர்புடையவை. அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் ஏப்ரல் 2023 இல் வரும் வங்கி விடுமுறைகள் குறித்து அறிந்திருக்க வேண்டும். உங்களுக்கும் ஏப்ரலில் வங்கி தொடர்பான ஏதேனும் வேலை இருந்தால், இப்போதிலிருந்தே திட்டமிடலாம். அத்தகைய சூழ்நிலையில், ஏப்ரல் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகள் இயங்கும், இயங்காது என்று பார்க்கலாம்.

ஏப்ரல் 2023 இல் மொத்தம் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
நாட்டில் உள்ள பெரும்பாலான வங்கிகளின் பணிகள் இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ளது. வங்கி தொடர்பான விடுமுறைகள் ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுக்குப் பிறகு முடிவு செய்யப்படுகின்றன. அரசு மற்றும் தனியார் வங்கிகள் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளைத் தவிர ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்காது. அதன்படி அடுத்த மாதம் ஏப்ரலில் 15 நாட்கள் வங்கி விடுமுறையாக இருக்கும். ரிசர்வ் வங்கி உத்தரவின்படி, ஏப்ரல் 2023 இல், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளுடன் ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட மொத்தம் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

மேலும் படிக்க | 7th PC Update: அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு! டிஏ 4% இருக்கலாம் AICPI சூசகம்

ஏப்ரல் 4ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி விடுமுறை
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்ரல் 4ஆம் தேதி விடுமுறை. இந்த காலகட்டத்தில் ஏடிஎம், பண வைப்பு, ஆன்லைன் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் தொடர்ந்து செயல்படும். வெவ்வேறு மாநிலங்களுக்கு ஏற்ப விடுமுறைகள் மாறலாம்.

ஏப்ரல் 2023 வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்
1. ஏப்ரல் 1, 2023 (சனிக்கிழமை): ஆண்டு கணக்கு முடிக்கும் நாள்
2. ஏப்ரல் 2, 2023 (ஞாயிற்றுக்கிழமை): விடுமுறை
3. ஏப்ரல் 4, 2023 (செவ்வாய்) - மகாவீர் ஜெயந்தி
4. ஏப்ரல் 5, 2023 (புதன்கிழமை) - பாபு ஜக்ஜீவன் ராம் பிறந்த நாள்
5. ஏப்ரல் 7, 2023 (வெள்ளிக்கிழமை) - புனித வெள்ளி
6. 8 ஏப்ரல் 2023 (சனிக்கிழமை) - மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை
7. ஏப்ரல் 9, 2023 (ஞாயிற்றுக்கிழமை) - விடுமுறை
8. ஏப்ரல் 14, 2023 (வெள்ளிக்கிழமை) - டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி / போஹாக் பிஹு / சீரோபா / பைசாகி / பைசாகி / தமிழ் புத்தாண்டு தினம் / மஹா பிசுபா சங்கராந்தி / பிஜூ விழா / பிசு விழா
9. ஏப்ரல் 15, 2023 (சனிக்கிழமை) - விஷு / போஹாக் பிஹு / ஹிமாச்சல் தினம் / பெங்காலி புத்தாண்டு தினம்
10. ஏப்ரல் 16, 2023 (ஞாயிற்றுக்கிழமை) - விடுமுறை
11. ஏப்ரல் 18, 2023 (செவ்வாய்) - ஷப்-இ-கத்ர்
12. 21 ஏப்ரல் 2023 (வெள்ளிக்கிழமை) - ஈத்-உல்-பித்ர் (ரம்ஜான் ஈத்) / கரியா பூஜை / ஜுமாத்-உல்-விடா
13. 22 ஏப்ரல் 2023 (சனிக்கிழமை) - மாதத்தின் நான்காவது சனிக்கிழமை மற்றும் ரமலான் ஈத் (இத்-உல்-பித்ர்)
14. 23 ஏப்ரல் 2023 (ஞாயிற்றுக்கிழமை) - விடுமுறை
15. 30 ஏப்ரல் 2023 (ஞாயிற்றுக்கிழமை) - விடுமுறை

மேலும் படிக்க | மத்திய ஊழியர்கள் மீது பண மழை! இந்த சலுகையை மோடி அரசு வழங்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News