ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியை விட தேசிய ஓய்வூதிய திட்டம் சிறந்ததா? இந்தக் கேள்விகான பதிலை தெரிந்துக் கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

NPS இல் முதலாளிகளின் சார்பு இல்லை  


ஸ்டார்ட்-அப்கள் தங்கள் ஊழியர்களின் EPF பங்களிப்புகளை EPFO ​​இல் டெபாசிட் செய்கின்றனர். EPF கணக்கை மூடுவதற்கு அல்லது மாற்றுவதில் சில பிரச்சனைகள் எழலாம்.  NPS இல் இதுபோன்ற பிரச்சனைகள் எதுவும் இல்லை, ஏனெனில் நீங்கள் ஒரு தனிநபராக ஆன்லைனில் கணக்கைத் திறக்கலாம், இதில் முதலாளி அல்லது இடைத்தரகர் தொடர்பும் இல்லாதது தேசிய ஓய்வூதிய திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. NPS திட்டத்தில், சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு மட்டுமல்ல, கிக் தொழிலாளர்கள், ஃப்ரீலேன்சர்கள் மற்றும் EPF இல்லாத சுயதொழில் செய்பவர்களுக்கும் சேரலாம்.


NPS இல் பங்களிப்புகள் மாறக்கூடியவை
 
ஒவ்வொரு மாதமும் உங்கள் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தை நீங்கள் பங்களிக்க வேண்டும் என்பது EPF திட்டத்தின் அடிப்படை. ஆனால் நீங்கள் வெறும் 500 ரூபாயில் தேசிய ஓய்வூதியக் கணக்கைத் திறக்கலாம். அதன்பிறகு, உங்கள் கணக்கை செயலில் வைத்திருக்க, வருடத்திற்கு 1000 ரூபாய் முதலீடு செய்தால் போதும். ஆனால், ஊழியர் வருங்கால வைப்புத் திட்டத்தில், மாதந்தோறும் சீரான தொகையை கட்ட வேண்டும். அவசர நிலையாக இருந்தாலும், பணப் பிரச்சனை இருந்தாலும் மாத தவணையை கட்டவேண்டும். 
ஆனால், தேசிய ஓய்வூதிய திட்டம், உங்கள் பங்களிப்புகளை மாதந்தோறும் மாற்றவும் அல்லது தவிர்க்கவும் அனுமதிக்கிறது. இது சீரான வருமானம் இல்லாதவர்களுக்கு மிகவும் நல்லது.  


ஒரு வருடத்திற்கு ரூ. 1.5 லட்சம் வரையிலான NPS பங்களிப்புகள் வருமான வரியைக் கணக்கிடுவதற்காக உங்கள் வருமானத்தில் சேர்க்கப்படாது, மேலும் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்குகளும் கிடைக்கும். EPF திட்டத்திலும் இந்த வசதி இருந்தாலுல்ம், NPS உங்களுக்கு கூடுதல் வரிச் சலுகையைக் கொடுக்கிறது. 


மேலும் படிக்க | NPS Withdrawal Rules: பணத்தை எடுக்க புதிய விதிகள் என்ன? இதற்கு வரம்பு உள்ளதா?


NPS அடுக்கு 1 கணக்கில் ஆண்டுக்கு ரூ. 50,000 வரை முதலீடு செய்தால், பிரிவு 80CCD (1B) இன் கீழ் வரிச் சலுகைகள் கிடைக்கும். இது பிரிவு 80C இன் கீழ் உங்கள் ரூ. 1.5 லட்சம் வரம்பிற்கு அதிகமானது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். 1.5 லட்சம் வரம்பை முடித்துவிட்ட பல 80C முதலீடுகள் உங்களிடம் இருக்கும் போது, ​​NPS திட்டம், கூடுதல் வரியைச் சேமிக்க உதவும். இது அடுக்கு 1 NPS கணக்கிற்கு மட்டுமே பொருந்தும்.


வட்டி விகிதம்


EPFஇல், வட்டி நிலையானது அல்ல, அரசு அறிவிக்கும் வட்டியே கொடுக்கப்படும்.  எதிர்காலத்தில் வட்டி விகிதங்கள் குறைந்தால், சமீபத்திய ஆண்டுகளில் கிடைக்கும் 8% EPF வருமானம் தொடரும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. ஆனால் NPS ஒரு மியூச்சுவல் ஃபண்ட் போல் செயல்படுகிறது. அதன் நிதி மேலாளர்கள் தினசரி அடிப்படையில் NAV மற்றும் அதன் போர்ட்ஃபோலியோவை மாதாந்திர அடிப்படையில் வெளியிடுகின்றனர். எனவே, நீங்கள் பங்களித்த பணம் எங்கு முதலீடு செய்யப்படுகிறது என்பதையும், எந்த நாளில் உங்கள் வருமானம் எங்கு உள்ளது என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.


சொத்து மற்றும் மேலாளரின் தேர்வு


EPF மூலம் உங்கள் பணம் எங்கு முதலீடு செய்யப்படும் என்பதை நீங்கள் கூற முடியாது. அதில் 85% க்கும் அதிகமானவை கடன் கருவிகளுக்கு செல்கிறது. ஆனால் பங்குகள், அரசுப் பத்திரங்கள் மற்றும் கார்ப்பரேட் பத்திரங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான உங்கள் ஒதுக்கீட்டைத் தீர்மானிக்க NPS உங்களை அனுமதிக்கிறது. அதிக ஈக்விட்டி ஒதுக்கீடு மூலம் அதிக வருமானம் ஈட்ட இது உங்களை அனுமதிக்கிறது.


மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்: SCSS திட்டத்தில் அதிரடி மாற்றங்களை செய்த அரசு


20 அல்லது 30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் NPS இல் தங்களின் பங்கு ஒதுக்கீட்டை அதிகப் படுத்திக்கொள்ள முடியும். ஓய்வுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் அதிக பத்திர ஒதுக்கீட்டை தேர்வு செய்யலாம். நல்ல விஷயம் என்னவென்றால், உங்கள் வாழ்க்கைச் சூழ்நிலை அல்லது நிலையின் அடிப்படையில் எந்த நேரத்திலும் உங்கள் நிலைப்பாட்டை மாற்றலாம்.


உங்கள் பங்குகள், கார்ப்பரேட் மற்றும் அரசாங்கப் பத்திரங்களின் கலவையைத் தீர்மானிப்பதைத் தவிர, NPS இன் கீழ் உங்கள் பணத்தை யார் நிர்வகிப்பது என்பதையும் நீங்கள் தீர்மானிக்கலாம். NPSக்கு ஏழு எம்பேனல் ஃபண்ட் மேனேஜர்கள் உள்ளனர், மேலும் உங்கள் பணத்தை நிர்வகிக்க ஏழு பேரில் யாரையாவது தேர்வு செய்யலாம்.


சந்தையுடன் தொடர்புடைய வருமானம்


பல மக்கள் EPF ஐ அதன் உயர் உத்தரவாத வருமானத்திற்காக விரும்புகிறார்கள் மற்றும் NPS ஐ தவிர்க்கிறார்கள், ஏனெனில் அதன் வருமானம் நிலையானது அல்ல, ஆனால் சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது. எந்த வருடத்தில் பங்கு மற்றும் பத்திரச் சந்தைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பொறுத்து NPS வருமானம் மாறுபடும். ஆனால் நீண்டகால அடிப்படையில் NPS நல்ல வருவாயைக் கொடுக்கும். 


NPS அடுக்கு 1 மேலாளர்களின் பங்குத் திட்டங்கள் கடந்த பத்து ஆண்டுகளில் ஆண்டுக்கு 12.5-13.7% வருமானத்தை வழங்கியுள்ளன. கார்ப்பரேட் பத்திர விருப்பங்கள் 7.8-9.1% ஆண்டு வருமானத்தை வழங்கியுள்ளன. அரசு பத்திர திட்டங்கள் 8.2-9.2% என்ற அளவில் உள்ளன.


மேலும் படிக்க | அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 இல்லை, இனி 62 வயதில் பணிஓய்வு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ