மூத்த குடிமக்களுக்கு எஸ்பிஐ-ன் அதிரடி ஆபர்!
எஸ்பிஐ வங்கி மூத்த குடிமக்களின் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்டிகளுக்கு அதிகபட்சமாக 6.65% வட்டி விகிதத்தை தருகிறது, முன்னர் இந்த விகிதம் 6.45% ஆக இருந்தது.
மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியானது ரூ. 2 கோடிக்குக் குறைவான பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை 10-20 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது, இந்த புதிய விகிதங்கள் அக்டோபர் 15ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த உயர்வால் மூத்த குடிமக்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கப்போகிறது, அவர்களுக்கு அதிகபட்சமாக 7.65% வரை வட்டி விகிதம் கிடைக்கும். எஸ்பிஐ வங்கி மூத்த குடிமக்களின் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்டிகளுக்கு அதிகபட்சமாக 6.65% வட்டி விகிதத்தை தருகிறது, முன்னர் இந்த விகிதம் 6.45% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஆதார் பயனர்களுக்கு மிகப்பெரிய வசதியை வழங்கியது UIDAI: மகிழ்ச்சியில் மக்கள்
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளுக்கு குறைவான கால அளவுள்ள கணக்குகளுக்கு 6.3% வட்டி விகிதமும், 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்கு குறைவான கால அளவுள்ள கணக்குகளுக்கு 6% வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. மேலும் மூத்த குடிமக்களுக்கு 211 நாட்கள் முதல் 1 வருடம் வரையிலான கணக்குகளுக்கு
5.20% விகிதமும், 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையிலான கணக்குகளுக்கு முறையே 5.10% மற்றும் 5.05% விகிதத்தையும், 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான கணக்குகளுக்கு 4.5% விகிதத்தையும், 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான கணக்குகளுக்கு 3.40% விகிதத்தையும் வழங்குகிறது.
அனைத்து மூத்த குடிமக்கள் மற்றும் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட எஸ்பிஐ ஓய்வூதியதாரர்களுக்கும், குடியுரிமை பெற்ற இந்திய மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து தவணைகளுக்கும் 0.50% விகிதம் அதிகமாக இருக்கும் என்று வங்கி தெரிவித்துள்ளது. எனவே எஸ்பிஐ ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்களின் 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரையிலான கணக்குகளுக்கு அதிகபட்சமாக 7.65% (6.65% + 1%) வட்டி விகிதம் பெறுவார்கள். என்ஆர்ஓ டெபாசிட்டுக்கு இந்த கூடுதல் 1% வட்டி கிடையாது,பொது பிரிவினரின் ரூ.2 கோடிக்கும் குறைவான எஃப்டிக்கு 3% முதல் 5.85% வரையிலான வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. மேலும் எஸ்பிஐ வங்கியானது மூத்த குடிமக்களுக்கான சிறப்பு “எஸ்பிஐ வீகேர்” டெபாசிட்டை அறிமுகப்படுத்தி உள்ளது, இதில் 30 அடிப்படை புள்ளிகள் கூடுதல் பிரீமியமாக வழங்கப்படும்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தீபாவளி பரிசு, அரசு தொடங்கிய சிறப்பு திட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ