சென்னை: கொரோனாவின் கோரப்பிடிக்கு, என்றும் அழியா கல்வி சற்றே நிலை தடுமாறினாலும், ஒருபோதும் நிலை குலையாது. கல்வியை காலத்திற்கு ஏற்ப, நோயின் தாக்கத்தில் இருந்து விடுவிப்பதற்காக தமிழக மாநில கல்வித்துறை தொலைகாட்சியை நோக்கி நகர்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீடுகளில் இருந்து கல்வியை தொடர வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கும்  மாணவர்களுக்கு படிக்கும் உத்வேகத்தைத் தருவதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன.
 
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் தமிழக பள்ளிகளில் கல்வி, தொலைக்காட்சியை நோக்கி வேறொரு பரிணாமத்தை எடுத்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசாங்கத்தின் கல்வித் தொலைக்காட்சி சேனலில் (Education TV channel) பத்து மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஒளிபரப்பை இன்று தொடங்கி வைத்தார். கல்வி தொலைக்காட்சி மூலம் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பயனடைவார்கள்.   


Also Read | பூமியை நெருங்கும் அரிய NEOWISE வால்நட்சத்திரத்தை வெற்றுக் கண்ணால் பார்க்க முடியுமா?


கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் மார்ச் 17 முதல் பள்ளிகளும் மூடப்பட்டன. நோய்த்தொற்றின் பாதிப்பு குறையாமல், அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. தற்போது அரசு எடுத்திருக்கும் இந்த முன்முயற்சிகளால் மாணவர்களின் கல்வி தடையில்லாமல் தொடரும்.


தமிழக அரசு தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் X மற்றும் XII வகுப்புகளுக்கான பாடங்கள் நடத்துவதை தொடங்கிவைத்தார்.  அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இந்த ஒளிபரப்பால் பலனடைவார்கள்.  
வாரத்தில் ஐந்து நாட்களாக திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணி நேரம் பாடங்கள் ஒளிபரப்பப்படும் என்று அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.


10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்களை வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே. ஏ.செங்கொட்டையன் மற்றும் உயரதிகாரிகள் முன்னிலையில் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.


12 ஆம் வகுப்புக்கு தேர்வாகியுள்ள மாநில வாரிய மாணவர்கள்(State board students), மாநில அரசு வழங்கிய விலையில்லா மடிக்கணினிகளைப் பயன்படுத்தி பாடத்திட்டத்தின் ஆடியோ காட்சி உள்ளடக்கத்தைப் (audio-visual content) பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  


Read Also | COVID-19க்கு சித்த மருத்துவ சிகிச்சை மட்டுமே கொடுக்கும் ஆராய்ச்சி விரைவில் தொடங்கும்


மாநிலம் முழுவதும் உள்ள அனுபவம் மிக்க மூத்த ஆசிரியர்களின் பங்களிப்புடன் தமிழக பள்ளி கல்வித் துறை, கல்வித் தொலைக்காட்சி சேனலை நடத்துகிறது. 


தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் மையப்படுத்தப்பட்ட படப்பதிவு நிலையமாக கல்வித் தொலைக்காட்சி விளங்குகிறது. இதுவரை எந்த மாநில கல்வித் துறையும் தொலைக் காட்சி சேனல்களை இயக்கியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையில், தமிழ்நாடு பள்ளிகளுக்கான திருத்தப்பட்ட பாடத்திட்டங்களை இறுதி செய்வதற்காக அமைக்கப்பட்ட 16 பேர் கொண்ட வல்லுநர்கள் குழுவின் அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்பட்டது. பள்ளி கல்வித் துறை ஆணையரும், இந்த குழுவின் தலைவருமான சி ஜி தாமஸ் வைத்யன் இந்த அறிக்கையை சமர்ப்பித்தார்.