நேரடியாக விவாதத்திற்கு அழைத்தால் ஸ்டாலின் வர மறுக்கிறார்: CM பழனிசாமி
பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது 15 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..
பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது 15 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் (TN Assembly Session) ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து, கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) இறங்கியுள்ளார். இன்று ராணிப்பேட்டை மாவட்டம் கைனூரில் பேசிய தமிழக முதல்வர், இன்னும் 15 நாட்களில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
இது குறித்து ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கைனூரில் முதலமைச்சர் பழனிசாமி இன்று பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது., "வெயில், மழை என்று உழைக்கும் விவசாயிகள் (Farmers) 16 லட்சத்து 43 ஆயிரம் குடும்பங்களுக்கு பால் வார்த்த அரசு AIADMK அரசு. விவசாய கடன் ரத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் 10 முதல் 15 நாட்களில் கடன் தள்ளுபடிக்கான ரசீது வழங்கப்படும். மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் அரசு (TN Govt) இது. தமிழ்நாடு முழுவதும் 95 சதவிகிதம் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.
ALSO READ | கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி - முதல்வர் பழனிசாமி!
மேலும், ஆட்சியில் இருக்கும்போது மக்களைச் சந்திக்காமல் தேர்தலின்போது மக்களை ஸ்டாலின் சந்திக்கிறார். நேரடியாக விவாதத்திற்கு அழைத்தால் ஸ்டாலின் (MK.Stalin) வர மறுக்கிறார் என்றும் அவர் கூறினார். தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கொரோனா வைரஸ் (Coronavirus) பரவல் கட்டுப்படுத்துப்பட்டுள்ளது" எனவும் அவர் தெரிவித்தார்.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR