Coconut Cream Smoothie: இதை குடித்து நாளை துவக்கினால், ஜெட் வேகத்தில் பணியாற்றலாம்!!
Summer Recipes: பொதுவாக மக்கள் தேங்காய் நீரை அதாவது இளநீரை பருகுவார்கள். ஆனால் இதன் கிரீமை பெரும்பாலும் அப்படியே விட்டுவிடுகிறார்கள்.
தேங்காய் கிரீம் ஸ்மூத்தி - செய்வது எப்படி: தேங்காயின் கிரீம் ஒரு ஆரோக்கியமான கொழுப்பாகும். இது நார்ச்சத்து மற்றும் பல ஆண்டி-ஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளது. ஆகையால், இதை உட்கொள்வதன் மூலம், உங்கள் இரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். அதே நேரத்தில், கார்போஹைட்ரேட்டுகளும் இதில் சிறிய அளவில் உள்ளன. இது உங்கள் எடையை அதிகரிக்க விடாது.
பொதுவாக மக்கள் தேங்காய் நீரை அதாவது இளநீரை பருகுவார்கள். ஆனால் இதன் கிரீமை பெரும்பாலும் அப்படியே விட்டுவிடுகிறார்கள். சொல்லப்போனால், இதன் கிரீமிலும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. நீங்கள் விரும்பினால், இந்த க்ரீமை ஸ்மூத்தி செய்தும் குடிக்கலாம்.
ஆரோக்கியமான விளைவுகளை அளிக்கும் தேங்காய் கிரீம் ஸ்மூத்தி செய்வதற்கான செய்முறையை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். இந்த கிரீம் ஸ்மூத்தியை மிக விரைவாக செய்து விடலாம். இதனுடன் உங்கள் நாளை தொடக்கினால், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். இதை உட்கொள்வதன் மூலம் உங்கள் செரிமானம் சிறப்பாக இருக்கும். மேலும், நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் உணர்வீர்கள். தேங்காய் கிரீம் ஸ்மூத்தி எப்படி செய்வது என்று இங்கே காணலாம்.
தேங்காய் கிரீம் ஸ்மூத்தி செய்ய தேவையான பொருட்கள்-
தேங்காய் கிரீம்
தேன் 1 டீஸ்பூன்
வெண்ணிலா சாறு 4 சொட்டுகள்
தண்ணீர் 1 கப்
மேலும் படிக்க | நீரிழிவை நிர்மூலமாக்கும் ‘நாட்டு மருந்து பொடி’! வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம்!
தேங்காய் மாலை ஸ்மூத்தி செய்வது எப்படி?
- தேங்காய் கிரீம் ஸ்மூத்தி செய்ய, முதலில் புதிய தேங்காயை எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு தேங்காயில் இருந்து நன்றாக கிரீம் எடுத்துக்கொள்ளுங்கள்.
- அதன் பிறகு, மிக்ஸி ஜாரில் கிரீமை பொடவும்.
- பின்னர் அதில் 1 கப் தண்ணீர், 1 தேக்கரண்டி தேன் மற்றும் 4 சொட்டு வெண்ணிலா சாறு சேர்க்கவும்.
- அதன் பிறகு, இவை அனைத்தையும் நன்கு அரைத்து கலவையை உருவாக்கவும்.
- இப்போது உங்கள் ஆரோக்கியமான மற்றும் சுவையான ஸ்மூத்தி தயார்.
இந்த ஸ்மூத்தியை காலையில் அருந்தி உங்கள் நாளை துவக்கினால் நாள் முழுவதும் மிகவும் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.
சமுதி செய்யும் போது இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்
- ஸ்மூத்தியை மிகவும் மிருதுவாக அரைக்க வேண்டாம்.
- இதை மேலும் ஆரோக்கியமானதாக்க, நறுக்கிய நட்சுகளை இதில் சேர்க்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்! கால்சியம் சூப்பர் ஃபுட்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ