நீரிழிவு நோய்க்கான இயற்கை சிகிச்சை: சர்க்கரை நோய் வந்து விட்டால், அதிலிருந்து விடுபடுவது மிகவும் கடினம். விலை உயர்ந்த மருந்துகளை உட்கொண்டாலும் சர்க்கரையை கட்டுப்படுத்த முடியாது. ஆனால் வீட்டில் தயாரிக்கப்படும் ஒரு பொடி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த சிறப்பாக உதவும். இந்த நாட்டு மருந்தை தயாரிக்க, கருப்பு மிளகு, பச்சை ஏலக்காய் உடம் மேலு சில பொருட்கள் தேவைப்படும்.
பாட்டி வைத்தியங்கள் நோயை தீர்ப்பதில் வரப்பிரசாதமாக இருக்கின்றன என்றால் மிகையில்லை. இவற்றில் பக்க விளைவுகளும் இல்லை. அந்த வகையில், இரத்த சர்க்கரை அளவை சிறப்பாக கட்டுப்படுத்தி, நீரிழிவு நோயை விரட்டும் மருந்தை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்வோமா?
சர்க்கரை நோய்க்கான நாட்டு மருந்து பொடி
கருப்பு மிளகு - ஏலக்காய் கொண்ட நாட்டு மருந்து பொடி
கருப்பு மிளகு - 100 (எண்ணிக்கை)
ஏலக்காய் - 100 (எண்ணிக்கை)
பாதாம் - 100 (எண்ணிக்கை)
வெந்தய விதைகள் - 2 டீஸ்பூன்
ஆம்லா தூள் - 2 டீஸ்பூன்
கருப்பு கொத்துக்கடலை - 250 கிராம்
காய்ந்த வேப்ப இலை - 2 டீஸ்பூன்
ஜாமுன் தூள் - 2 டீஸ்பூன்
மேலும் படிக்க | நீரிழிவு நோயை ஓட விரட்டும் கோதுமை அல்லாத ‘சில’ சப்பாத்திகள்!
தாயாரிக்கும் முறை
இவை அனைத்தையும் ஒரு மிக்ஸியில் போட்டு நன்றாக பொடி செய்து கொள்ளவும். உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் 1 டீஸ்பூன் தண்ணீரில் இந்த பொடியை எடுத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், இந்த மருந்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம்.
நீரிழிவு நோயை எவ்வாறு தாக்குகிறது?
நீரிழிவுக்கான இந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட பொடியில் அதிக நார்ச்சத்து உள்ளது. இதனால் சாப்பிட்ட பிறகு இரத்த சர்க்கரை திடீரென உயராது. அதே நேரத்தில், பாதாம் மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றில் உள்ள வைட்டமின் ஈ செரிமானத்தை அதிகரிப்பதன் மூலம் நீரிழிவு நோய்க்கு நிவாரணம் அளிக்கிறது.
கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
கர்ப்பிணிப் பெண்கள், நீரிழிவு நோய்க்கான மருந்துகளை உட்கொள்ளும் நோயாளிகள் அல்லது இதய நோயாளிகள் இந்த தீர்வைச் செய்வதற்கு முன் ஒருமுறை மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ