நீரிழிவு நோயாளிகளுக்கு வெந்தயம் ஒரு வரப்பிரசாதம்
Fenugreek Benefits: வெந்தயம் இன்சுலின் அளவை அதிகரிக்க உதவுகிறது. வெந்தய விதைகள் பெரும்பாலும் நம் இந்திய சமையலில் பயன்படுத்தப்படுகிறது.
நீரிழிவு நோய்: வெந்தய விதைகளில் நார்ச்சத்து மற்றும் பிற இரசாயனங்கள் உள்ளன. இதனால் செரிமானம் மெதுவாக நடக்கலாம். மேலும் இது உடலில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரையின் உறிஞ்சுதலையும் மெதுவாக்கும். வெந்தய விதைகள் சர்க்கரையை உடல் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை மேம்படுத்தவும் உதவுகிறன்றன. இது தவிர, இன்சுலின் அளவை அதிகரிக்கவும் இது உதவுகிறது.
இரத்த சர்க்கரை கட்டுப்படுத்தப்படும்
நீங்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த விரும்பினால், இன்று முதலே வெந்தய விதைகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். வெந்தயம் இன்சுலின் அளவை அதிகரிக்க உதவுகிறது. வெந்தய விதைகள் பெரும்பாலும் நம் இந்திய சமையலில் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த மசாலா மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. வெந்தய விதைகளின் பலன்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
வெந்தயம் இன்சுலின் அளவை அதிகரிக்கும்
- வெந்தய விதைகளில் நார்ச்சத்து மற்றும் பிற இரசாயனங்கள் உள்ளன.
- இவை உடலில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரையின் செரிமானம் மற்றும் உறிஞ்சுதலை மெதுவாக்கும்.
- உடல் சர்க்கரையை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை மேம்படுத்தவும் வெந்தய விதைகள் உதவுகின்றன.
- இது தவிர, இன்சுலின் அளவை அதிகரிக்கவும் வெந்தயம் உதவுகிறது.
மேலும் படிக்க | Mens Health: திருமணமான ஆண்களின் நண்பன் இந்த மாதுளை
நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்
- இன்றைய காலகட்டத்தில், தவறான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக, மக்கள் பல நோய்களுக்கு ஆளாகிறார்கள்.
- ஆகையால், நீரிழிவு நோயாளிகளுக்கு வெந்தயம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- இதில் உள்ள சத்துக்கள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.
- வெந்தயம் உடலின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
வெந்தயத்தின் ஏராளமான பயன்களில் இவை முக்கியமானவை:
- உடல் எடையை குறைக்க உதவும்.
- இரும்புச்சத்து குறைபாட்டை நீக்குகிறது.
- முடி உதிர்தல் குறையும்
- மாதவிடாய் சீராகும்.
- வயிற்றுப் பிரச்சனைகள் குணமாகும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | ஆரஞ்சு ஜூஸ் பிடிக்குமா, ஜாக்கிரதை: இதனால் உடல் கொழுப்பு அதிகரிக்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR