கிவி மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி: அதிகரித்து வரும் உடல் எடையை கட்டுப்படுத்த நம்மில் பலர் மிகவும் கடினமாக உழைக்கிறோம். இதற்கு, உணவுக் கட்டுப்பாட்டுடன், உடற்பயிற்சியும் பரிந்துரைக்கப்படுகிறது.
இதனுடன், சில குறிப்பிட்ட காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதன் மூலமும் உடல் எடையை குறைக்க முடியும். இவை உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். அத்தகைய பழங்களில் கிவி பழமும் ஒன்றாகும்.
கிவி பழத்தை உட்கொள்வதன் மூலம், அதிகரித்து வரும் எடையை எளிதாக கட்டுப்படுத்தலாம். நீங்கள் கிவி பழம் மூலம் உடல் எடையை குறைக்க விரும்பினால், இந்த வழிகளில் கிவியை உங்கள் உணவில் சேர்க்கலாம். கிவி மூலம் எப்படி உடல் எடையை குறைப்பது என்பதை இந்த பதிவில் காணலாம்.
உடல் எடையை குறைக்க, இந்த வழிகளில் கிவியை உட்கொள்ளலாம்
மேலும் படிக்க | Diabetes: இந்த பொருட்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்
கிவி ஸ்மூத்தி
எடையைக் குறைக்க கிவி ஸ்மூத்தி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை செய்ய, ஒன்று முதல் இரண்டு புதிய கிவி பழங்களில் முதலில் தோல் உரித்துக்கொள்ளவும். இப்போது அதில் தயிர், பாதாம் மற்றும் சில துளிகள் தேன் சேர்க்கவும். அனைத்து பொருட்களையும் நன்றாக அரைத்து ஸ்மூத்தியாக தயார் செய்யவும். இந்த ஸ்மூத்தியை சாப்பிட்டால் நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும். இதனால் அதிகரித்து வரும் உடல் எடையில் இருந்து விடுபடலாம்.
சாலட் ப்ளேட்டர்
நீங்கள் சாலட் தொகுப்பில் கிவி பழத்தை சேர்த்து சாப்பிடலாம். இதற்கு, நீங்கள் அனைத்து சாலட்டுக்கான காய்கள் மற்றும் பழங்களை நறுக்கும் போது கிவியையும் நறுக்கி அவற்றுடன் சேர்த்து உட்கொள்ளலாம். இந்த வழியில், உங்கள் எடையை எளிதாகக் குறைக்கலாம்.
கிவி பானம்
கிவியை தோலுரித்து பொடியாக நறுக்கவும். அதன் பிறகு, நடுத்தர அளவிலான வெள்ளரிக்காயை வெட்டி இரண்டையும் மிக்சியில் அரைக்கவும். இதற்குப் பிறகு, தயாரிக்கப்பட்ட பேஸ்டில் சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு கிளாஸில் ஊற்றவேண்டும். அதற்கு மேலே இருந்து கொத்தமல்லி தூள் சேர்க்கவும். இந்த பானத்தை காலையிலும் மாலையிலும் குடிக்கவும். இதனால் உடலில் உள்ள கொழுப்பை எளிதாக வெளியேற்றலாம்.
கிவி பழத்தை உட்கொள்வதால் உடலுக்கு ஏராளமான பிற நன்மைகளும் கிடைக்கின்றன:
- இதய நோய், இரத்த அழுத்த பிரச்சனை மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு கிவி மிகவும் நன்மை பயக்கும்.
- கிவி சாப்பிடுவது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
- கிவி சாப்பிடுவதால், சருமம் பளபளப்பாகும், சுருக்கங்கள் நீங்கும்.
- வயிற்றில் ஏற்படும் உஷ்ணம் மற்றும் அல்சர் போன்ற நோய்களை நீக்குவதில் கிவி மிகவும் பயனுள்ள பழமாக கருதப்படுகிறது.
- கிவியில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது. இதன் காரணமாக கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்.
- கிவி சாப்பிடுவது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. தினமும் கிவி சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு குறைகிறது.
- மூட்டு வலி, எலும்பு வலியைப் போக்கவும் கிவி உதவுகிறது.
- கிவி மன அழுத்தத்தையும், பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று பாதிப்பையும் குணமாக்குகிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Cholesterol: கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் 4 உலர் பழங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR