ஆயுர்வேதத்தில் இன்சுலின் செடிகளுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இதன் அறிவியல் பெயர் காக்டஸ் பிக்டஸ் ஆகும். இது க்ரீப் இஞ்சி, கெமுக், கியூ, கிகண்ட், குமுல், பகர்முலா மற்றும் புஷ்கர்முலா போன்ற பிற பெயர்களாலும் அறியப்படுகிறது. இதன் இலைகளின் சுவை புளிப்பாக இருக்கும். இருப்பினும், நீரிழிவு நோயாளிகளுக்கு இது நிச்சயமாக ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
உடலில் இருக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது
இந்த இன்சுலின் செடி பொதுவாக இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், இருமல், சளி, தோல் தொற்று, கண் தொற்று, நுரையீரல் நோய்கள், ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற நோய்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு இலை பல வகையான நோய்களில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் படிக்க | எச்சரிக்கை! அளவிற்கு அதிகமான பாராசிட்டமால் மருந்தால் மரணம் கூட சம்பவிக்கலாம்!
இரத்த சர்க்கரையின் அறிகுறிகள்
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் போது, சோர்வு, தலைவலி, மங்கலான பார்வை மற்றும் தலை பாரத்துடன் இருப்பது போன்று இருக்கும். உடலில் சர்க்கரையின் அளவானது அதிகரிக்கும் நேரம், எப்போதுமே பசியுடன் இருப்பது போன்று உணரக்கூடும். போதிய அளவில் தண்ணீர் பருகாமல் இருந்தால், உடலானது வறட்சியடைய ஆரம்பிக்கும். மறுபுறம், இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் போது நடுக்கம், பசி, வியர்வை, அமைதியின்மை மற்றும் எரிச்சல் ஆகியவை உணரப்படுகின்றன.
தண்ணீர் குடிப்பதாலும் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தும்
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க தண்ணீர் ஒரு எளிதான வழியாகும். நீங்கள் தண்ணீர் குடித்தால் அது உங்கள் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்த உதவும். உடலில் இருந்து நச்சுகள் மற்றும் இன்சுலினை நீர் மூலம் அகற்ற சிறுநீரகம் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்சுலின் செடியின் மருத்துவ குணங்கள்
இன்சுலின் செடியின் 2 இலைகளை சர்க்கரை நோயாளிகள் தினமும் பச்சையாக காலையில் சாப்பிட்டு வரலாம். இதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு வெகுவாக கட்டுப்படுத்தப்படுகிறது. நோயாளிகளுக்கு இன்சுலின் செடியின் இலை உடலுக்கு தேவையான அதிக பயன்களைத் தருகிறது.
உடலில் இன்சுலின் சுரப்பு குறைபாடு ஏற்படும் போது அதற்கு இந்த இன்சுலின் இலை மருந்தாக அமைகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் உடலில் நமைச்சல் ஏற்படுகிறது. எனவே சர்க்கரை நோய்க்கு இந்த இன்சுலின் இலைகள் சிறந்த மருந்தாகிறது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR