புளியின் அட்டகாசமான அரோக்கிய நன்மைகள்: எடை இழப்பு, இதய பாதுகாப்பு, செரிமானம்.... லிஸ்ட் இன்னும் இருக்கு
Benefits of Tamarind: நம் சமையலறையில் இருக்கும் புளி குளிர்காலத்தில் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகிறார்கள்.
Benefits of Tamarind: குளிர்காலம் தொடங்கிவிட்டது. இந்த காலத்தில் இதயம் தொடர்பான பிரச்சனைகளின் ஆபத்து அதிகரிக்கிறது. குறிப்பாக மாரடைப்பு பாதிப்புகள் மனிதர்கள் இடையே இந்த காலத்தில் அதிகம் காணப்படுகின்றன. எனினும், சில இயற்கையான வழிகளில் நாம் நமது இதயத்தை பாதுக்காப்பது மட்டுமல்லாமல், இன்னும் பல வித ஆரோக்கிய நன்மைகளையும் பெறலாம்.
குளிர்காலத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் அத்தகைய இயற்கையான வழிகளில் புளியின் பயன்பாடும் ஒன்றாகும். நம் சமையலறையில் இருக்கும் புளி குளிர்காலத்தில் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகிறார்கள். இது தவிர, புளி நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், புற்றுநோயைத் தடுப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும்.
உத்திரபிரதேச மாநிலம் ஹர்தோயில் அமைந்துள்ள ஷதாயு ஆயுர்வேத மற்றும் பஞ்சகர்மா மையத்தின் தலைவர் டாக்டர் அமித் குமார் இது பற்றி கூறியுள்ளார். 'புளியில் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை உள்ளது. குளிர்காலத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதால் நரம்புகளில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் புளியை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவை வெகுவாக குறைக்கலாம்' என அவர் தெரிவித்துள்ளார்.
இதய ஆரோக்கியம் (Heart Care)
புளியில் உள்ள ஃபிளாவனாய்டுகள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நரம்புகளை சுத்தமாக வைத்திருக்க உதவுகின்றன. இது மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது. இது தவிர, புளி வீக்கத்தையும் குறைக்கிறது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த மிக அவசியமாகும்.
மேலும் படிக்க | மன அழுத்தத்தை ஓட விரட்ட... ஹேப்பி ஹார்மோன்களை அதிகரிக்க... நீங்கள் செய்ய வேண்டியவை
நோய் எதிர்ப்பு சக்தி (Immunity)
புளியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கின்றன என்று டாக்டர் அமித் விளக்குகிறார். இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி ஆண்டி-ஆக்சிடென்ட் சேதத்தை குறைக்கிறது. இதன் காரணமாக, உடலின் செல்கள் பாதுகாப்பாக இருக்கும். மேலும் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களின் அபாயமும் இதனால் குறைகிறது.
செரிமான அமைப்பு சீராகும் (Digestion)
புளி செரிமான அமைப்புக்கும் நன்மை பயக்கும் என்கிறார் டாக்டர் அமித். இதில் உள்ள அமிலங்கள் செரிமானத்தை மேம்படுத்துகின்றன. புளியை உட்கொள்வதால் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற வயிற்றுப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
எடை இழப்பு (Weight Loss)
புளியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும், இதில் கலோரிகளின் அளவும் மிக குறைவாக உள்ளது. இதன் காரணமாக இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது தவிர, இதில் உள்ள அமினோ அமிலங்கள் உடல் திசுக்களை வலுப்படுத்த வேலை செய்கின்றன.
புளியை எப்படி சாப்பிட வேண்டும்?
புளியை ரசம், சாம்பார் ஆகியவற்றில் சேர்ப்பதுடன், சூப், துவையல் போன்றவற்றிலும் சேர்த்து உட்கொள்ளலாம். எனினும், இதை அதிகமாக உட்கொள்ளக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஆஸ்டியோபோரோசிஸ் முதல் அனீமியா வரை... பல நோய்களுக்கு மருந்தாகும் சப்போட்டா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ