Sapota Benefits: சுவையும் ஊட்டச்சத்தும் நிறைந்த பழங்களில் சப்போட்டாவும் அடங்கும். நமது ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்தும் பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் அக்ஸிஜனேற்றங்கள் இதில் நிறைந்துள்ளன.
பொதுவாக பழங்கள் அனைத்துமே, எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டது. அந்த வகையில், மன அழுத்தத்தை குறைப்பது முதல், நரம்பு மண்டலம், எலும்புகள் ஆகியவற்றை வலுப்படுத்தும் ஆற்றல் சப்போட்டாவிற்கு உண்டு. இந்நிலையில், இதில் நிறைந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சப்போட்டா: ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் பழமான சப்போட்டாவில், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நியாசின், போலேட் மற்றும் பாந்தோதெனிக் அமிலம் ஆகியவை நிறைந்துள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து, பாஸ்பரஸ், புரதம் பொட்டாசியம், கால்சியம் இரும்புச்சத்து ஆகியவையும் நிறைந்துள்ளது.
மன ஆரோக்கியம்: சப்போட்டாவில் உள்ள இயற்கை சேர்மங்கள், நரம்பு மண்டலத்தை வலுவாக்கி, நரம்புகளில் ஏற்படும் அழுத்தத்தை போக்கி, மன அழுத்தம் மற்றும் மன பதற்றத்தை நீக்கி, மனநலனை மேம்படுத்துகிறது. இதனால், மனம் உற்சாகமாக இருக்க, இந்த பழத்தை அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும்.
இளமை: சப்போட்டாவில் நிறைந்துள்ள வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள், செல்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரா டிக்கல்களை நடுநிலையாக்கி, இளமையை காக்க உதவுகிறது. சரும சுருக்கங்களை நீக்குவதுடன், கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
அபரிமிதமான ஆற்றல்: உடலுக்கு உடனடி ஆற்றலை தந்து சோர்வை நீக்கும் திறன் சப்போட்டாவிற்கு உண்டு.. உயிர் சக்தியை அதிகரித்து புத்துணர்ச்சியை பெற, சப்போட்டாவை சாப்பிடலாம். இயற்கை சர்க்கரைகளும் கலோரிகளும் இதற்கு காரணம்.
எலும்பு ஆரோக்கியம்: சப்போட்டாவில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளதால், எலும்புகள் அடர்த்தியை அதிகரித்து, ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு முறிதல் நோய், மூட்டு வலி, கீழ்வாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
செரிமான ஆரோக்கியம்: நார்ச்சத்து நிறைந்த சப்போட்டா, குடல் இயக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலை போக்குகிறது. அதோடு குடலுக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரிப்பதால், வாயு வயிற்று உப்பிசம், நெஞ்செரிச்சல் போன்ற செரிமான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி: சப்போட்டாவில் உள்ள வைட்டமின் சி மற்றும் இதர வைட்டமின்கள், நோய் எதிர்ப்பு சக்தி வெளிப்படுத்துகின்றன. இதனால் அடிக்கடி ஏற்படும் இருமல் சளி போன்ற பிரச்சனைகள் நீங்கும். பருவ கால நோய் தொற்றுகள் தொற்றுகளில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும்.
இரத்த சோகை: சப்போட்டாவில் இரும்பு சத்து நிறைந்துள்ளதால், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. ரத்த சோகை இருப்பவர்கள் இதனை தவறாமல் எடுத்துக் கொள்வதால், ரத்த விருத்தி ஏற்பட்டு, உடல் பலவீனம் நீங்கி, ஆற்றல் அளவை அதிகரிக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.