மன அழுத்தத்தை ஓட விரட்ட... ஹேப்பி ஹார்மோன்களை அதிகரிக்க... நீங்கள் செய்ய வேண்டியவை

How To Increase Happy Hormone: உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும், ஹேப்பி ஹார்மோன்களை அதிகரிக்கவும் சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 18, 2024, 12:29 PM IST
  • ஹேப்பி ஹார்மோன்களை அதிகரிக்க, கடைபிடிக்க வேண்டிய விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.
  • மனநிலையை மேம்படுத்தும் உணவுகளை டயட்டில் சேர்க்கவும்.
  • செரடோனின் ஹார்மோனை அதிகரிக்க உதவும், ட்ரிப்டோன் என்னும் அமினோ அமிலம் நிறைந்த உணவுகள்.
மன அழுத்தத்தை ஓட விரட்ட... ஹேப்பி ஹார்மோன்களை அதிகரிக்க... நீங்கள் செய்ய வேண்டியவை title=

மன அழுத்தம், டென்ஷன் ஆகியவை நவீன வாழ்க்கையின் பொதுவான பிரச்சனையாக ஆகி விட்டது. சில சமயங்களில் வேலை அழுத்தம் காரணமாக டென்ஷன் இருக்கும். சில நேரங்களில் உறவுகளில்  ஏற்படும் பாதிப்பினால் மனக் கவலை ஏற்படலாம். இன்று என்ன சமைப்பது அல்லது சாப்பிடுவது என்ற டென்ஷன் கூட இருக்கலாம். இவை அனைத்தும் உங்கள் மனநிலையை பாதிக்கிறது. இதன் காரணமாக உடலில் மகிழ்ச்சியான ஹார்மோன் அளவு குறையலாம். எனவே, உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும், ஹேப்பி ஹார்மோன்களை அதிகரிக்கவும் சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.

ஹேப்பி ஹார்மோனை அதிகரிக்கும் உணவுகள் 

நமது மனதில் உள்ள பதற்றமும் அழுத்தமும் தூர விலகவும், மனதில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிறைந்திருக்கவும் செரடோனின் ஹார்மோனை அதிகரிக்க உதவும், ட்ரிப்டோன் என்னும் அமினோ அமிலம் நிறைந்த உணவுகளை உண்ண (Health Tips) வேண்டும். வாழைப்பழம், அன்னாசிப்பழம்,  பசுவின் பால், சோயா உணவுகள், பாதாம் பருப்பு போன்றவை  ட்ரிப்டோன் அதிகம் உள்ள உணவுகளில் சில. அதோடு, உங்கள் உணவில் எண்ணெய்கள் மற்றும் மசாலாப் பொருட்கள் அதிக்ம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். அது உங்கள் மனநிலையையும் பாதிக்கும். எனவே, உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், மனநிலையை மேம்படுத்தும் உணவுகளை டயட்டில் சேர்க்கவும்.

தியான பயிற்சி

தியானம் என்பது மனதை அமைதியாக வைத்திருப்பதுடன், உடலுக்கு ஆக்ஸிஜனை  அள்ளித் தரும் சிறந்த பயிற்சியாகும். மகிழ்ச்சியான ஹார்மோன்களை அதிகரிக்க தியானம் ஒரு சிறந்த மருந்து. தொடர்ந்து தியானம் செய்வதன் மூலம், மகிழ்ச்சியான ஹார்மோனின் அளவு மேம்படும். குறிப்பாக தியானம் செய்வதன் மூலம் மனநிலையை நன்றாக வைத்திருக்கும் செரோடோனின் ஹார்மோன் அதிகரிக்கிறது. மேலும், நீங்கள் சூரிய ஒளியில் அமர்ந்து தியானம் செய்தால், பலன் பன்மடங்காக இருக்கும்.

மேலும் படிக்க | சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறையும்.... ஆனால், தலையில் வழுக்கையும் விழும்...!

உடற்பயிற்சி

நீங்கள் மகிழ்ச்சியான ஹார்மோனின் அளவை பராமரிக்க விரும்பினால்,  உடற்பயிற்சி தவறாமல் செய்யுங்கள். உடற்பயிற்சி உடலில் இருந்து மன அழுத்தத்தை நீக்குகிறது. உடலில் உள்ள நச்சுக்களையும் நீக்குகிறது. மேலும் மனதை அமைதியாக வைத்திருக்கும் எண்டோர்பின் ஹார்மோனின் அளவும் மேம்படும்.

பிடித்த பாடல்களை கேட்டல்

இசையை விரும்பாத மனிதர்கள் இருக்க மாட்டார்கள். பிடித்த இசை அல்லது பாடல் உடலில் மகிழ்ச்சியான ஹார்மோன் அளவை அதிகரிக்க ஒரு நல்ல வழியாகும். பிடித்த பாடல்களைக் கேட்பதால் உடலில் டோபமைன் அளவு அதிகரித்து மனமும் நிம்மதியாக இருக்கும். மன ஆரோக்கியத்திற்கு அல்லது மனதை ரிலாக்ஸ் செய்வதற்கு இசையை கேட்பது நல்ல பலனைத் தரும். உங்களுக்குப் பிடித்தமான இசையையோ, பாடலையோ கேட்கும் போது மனது தானாக மகிழ்ச்சி அடைகிறது. 

சமூக வாழ்க்கை

சமூக ஊடகங்களின் ஆதிக்கம் நிறைந்த இந்த காலத்தில், பெரும்பாலானோர் கணிணி  மற்றும் மொபைல் திரைக்கு நெருக்கமாகி மற்றவர்களிடமிருந்து விலகிவிட்டனர். மகிழ்ச்சியாக இருக்க, நட்பு வட்டத்தில் உள்ள பலரைச் சந்தித்து பேசுவது அவசியம். நெருக்கமானவர்களுடன் மன விட்டு பேசுவதும், நட்புகளை சந்திப்பதும் மகிழ்ச்சி ஹார்மோன்களின் அளவை அதிகரிக்கிறது.

யோகா பயிற்சி

மகிழ்ச்சி ஹார்மோன்களின் அளவை அதிகரிக்க யோகா பயிற்சி ஒரு சிறந்த வழியாகும். யோகா செய்வதால் மன அழுத்தம் நீங்கும். உடல் வலிமையும் அதிகரிக்கும். மேலும், மூளைக்கு ஆற்றல் கிடைக்கிறது. எனவே, யோகா மனநிலையை மேம்படுத்த ஒரு சிறந்த வழி என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

(பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் பொதுவானவை மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்த தகவல்கள் ஆகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்பதை வாசகர்கள் மறக்கக் கூடாது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை)

மேலும் படிக்க | சிறுநீரக பாதிப்புக்கான காரணங்கள்: பிபி முதம் சுகர் வரை... பல காரணங்கள் உள்ளன

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News