Big Announcement: நாடு முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி தொடர்பாக மத்திய அரசு மிகப் பெரிய அறிவிப்பை வெளியிட்டது. கொரோனா வைரஸ் தடுப்பூசி நாடு முழுவதும் இலவசமாக வழங்கப்படும்...
புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி கொடுப்பதற்கான ஒத்திகை நாடு முழுவதும் தொடங்கியது. கொரோனா தடுப்பூசி கொடுக்கும் ஒத்திகை நிகழ்வானது ஒவ்வொரு மாநில தலைநகரிலும் நடைபெறுகிறது. தடுப்பூசிகளை அனைத்து மக்களுக்கும் கொடுப்பதில் மாநிலங்களின் முயற்சிகளை உறுதி செய்து, பாதுகாப்பை இறுதி செய்வதே தடுப்பூசி சோதனை ஓட்டம் நடத்துவதே இதன் நோக்கம்.
இதற்கிடையில், உலகுக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கொரோனா தடுப்பூசி நாடு (Corona Vaccine) முழுவதும் இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறுகிறது.
டெல்லியில் செய்தியாளர்களிடையே பேசிய மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன், நாடு முழுவதும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று கூறினார்.
முதலில் டெல்லியில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று டெல்லி அரசு அறிவித்திருந்தது. தற்போது, மத்திய சுகாதார அமைச்சரின் அறிவிப்பு, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு ஆறுதல் அளிக்கும்.
தடுப்பூசி ஒத்திகை நடத்தும் மையங்கள் நாட்டின் (India) பல்வேறு மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 17 மையங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. பயிற்சி பெற்ற சுகாதார ஊழியர்கள் இந்த ஒத்திகையில் கலந்துக் கொண்டனர்.
Also Read | இந்தியாவில் SII தடுப்பூசி Covishield அவசர பயன்பாட்டிற்கு பரிந்துரை
குறிப்பிடத்தக்க வகையில், கொரோனா (Coronavirus) தடுப்பூசி சம்பந்தப்பட்ட இந்த முயற்சி இதுவரை நாட்டில் மிகப்பெரிய தடுப்பூசி பிரச்சாரம் ஆகும். நாட்டின் 116 மாவட்டங்களில் 259 மையங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படுகின்றன.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR