புதுடெல்லி: இந்தியாவின் கொரோனா தொற்று பாதிப்பின் மொத்த எண்ணிக்கை  90.50 லட்சமாக உயர்ந்தது. அதே நேரத்தில் நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 84.78 லட்சத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. தேசிய அளவில் குஅமடையும் வீதம் 93.67 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 24 மணி நேரத்தில், 46,232 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ( Corona Virus) ஏற்பட்டதை அடுத்து, மொத்த கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை, 90,50,597 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 1,32,726 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 564  பேர் இறந்துள்ளனர் என சுகாதர துறை தரவு கூறுகிறது.


நாட்டில் அக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து பதினொன்றாவது நாளாக ஐந்து லட்சத்திற்கும் குறைவாகவே இருந்தது.


இன்றைய நிலவரப்படி, நாட்டில் 4,39,747  ஆக்டிவ் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் உள்ளனர். இது மொத்த தொற்று பாதிப்பில், 4.86 சதவீதம் ஆகும்.


குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 84,78,124 ஆக உயர்ந்துள்ளது, இது தேசிய அளவிலான மீட்பு வீதத்தை 93.67 சதவீதமாக உயர்த்தியுள்ளது, அதே நேரத்தில் COVID-19 தொற்று நோயினால் ஏற்பட்ட இறப்பு விகிதம் 1.47 சதவீதமாக உள்ளது.


இந்தியாவின் கோவிட் -19 எண்ணிக்கை ஆகஸ்ட் 7 ஆம் தேதி 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23 அன்று 30 லட்சத்தையும், செப்டம்பர் 5 ஆம் தேதி 40 லட்சத்தையும் தாண்டியது.


மேலும், செப்டம்பர் 16 அன்று 50 லட்சத்தையும், செப்டம்பர் 28 அன்று 60 லட்சத்தையும், அக்டோபர் 11 அன்று 70 லட்சத்தையும், அக்டோபர் 29 அன்று 80 லட்சத்தையும் தாண்டியது.


ALSO READ | கிறிஸ்துமஸுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசி... Pfizer-BioNTech அறிவிப்பு..!!!


நவம்பர் 20 ஆம் தேதி வரை 13.06 கோடி பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை 10,66,022 பேர்  பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.


நாட்டில் கொரோனாவினால் ஏற்பட்ட 564 புதிய உயிரிழப்புகளில் மகாராஷ்டிராவைச் (Maharashtra) சேர்ந்தவர்கள் 155 பேர், டெல்லியைச் சேர்ந்த 118 பேர், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 50 பேர், கேரளாவைச் சேர்ந்த 28 பேர், ஹரியானாவை சேர்ந்த 25 பேர், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 20 பேர் ஆகியோர் அடங்குவர்.


நாட்டில் இதுவரை பதிவான மொத்த 1,32,726 இறப்புகளில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 46,511 பேர், கர்நாடகாவைச் சேர்ந்த 11,621 பேர், தமிழ்நாட்டிலிருந்து 11,568 பேர், டெல்லியை சேர்ந்த 8,159 பேர், மேற்கு வங்கத்திலிருந்து 7,923 பேர், உத்தரபிரதேசத்திலிருந்து 7,500 பேர், ஆந்திராவில் 6,920 பேர், பஞ்சாபில் இருந்து 4,572 பேர், குஜராத்திலிருந்து 3,837 பேர் ஆகியோர் அடங்குவர்.


70 சதவீதத்திற்கும் அதிகமான இறப்புகள், கொரோனா தொற்றுடன் கூட வேறு விதமான நோய்களும் இருந்ததன் காரணமாக ஏற்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


ALSO READ | டீ குடிக்க பேப்பர் கப் யூஸ் பண்றீங்களா.. அப்ப இதை கண்டிப்பா படிங்க..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR