டீ குடிக்க பேப்பர் கப் யூஸ் பண்றீங்களா.. அப்ப இதை கண்டிப்பா படிங்க..!!!

நம்மில் பலருக்கு டிஸ்போஸபிள் பேப்பர் கப் பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது. நிறைய விருந்தினர்கள் இருக்கும் போது, காப்பி டீ குடிக்க பேப்பர் கப் தான் நிறைய யூஸ் பண்ணுகிறோம். கப்பை சுத்தம் செய்யும் வேலை மிச்சம் என நினைத்து செய்கிறோம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 8, 2020, 07:11 PM IST
  • நம்மில் பலருக்கு டிஸ்போஸபிள் பேப்பர் கப் பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது.
  • நிறைய விருந்தினர்கள் இருக்கும் போது, காப்பி டீ குடிக்க பேப்பர் கப் தான் நிறைய யூஸ் பண்ணுகிறோம்.
  • கப்பை சுத்தம் செய்யும் வேலை மிச்சம் என நினைத்து செய்கிறோம்.
டீ குடிக்க பேப்பர் கப் யூஸ் பண்றீங்களா.. அப்ப இதை கண்டிப்பா படிங்க..!!! title=

நம்மில் பலருக்கு டிஸ்போஸபிள் பேப்பர் கப் பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது. நிறைய விருந்தினர்கள் இருக்கும் போது, காப்பி டீ குடிக்க பேப்பர் கப் தான் நிறைய யூஸ் பண்ணுகிறோம். கப்பை சுத்தம் செய்யும் வேலை மிச்சம் என நினைத்து செய்கிறோம். 

இது மிகவும் ஆப்பத்தானது. பேப்பர் கப்கள் குடிப்பதற்கு பாதுகாப்பானவை அல்ல. அவற்றில் மூன்று கப் டீ குடிப்பவர், சுமார் 75,000 நுண்ணிய மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை உட்கொள்கிறார் என்று இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) கரக்பூர் ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறிந்துள்ளது.

காகிதக் கோப்பைகளில் பொதுவாக மெல்லிய அடுக்கு ஹைட்ரோபோபிக் பொருளால் பூசப்படுகின்றன. அவை பெரும்பாலும் பிளாஸ்டிக் (பாலிஎதிலீன்) மற்றும் சில சமயங்களில் கோ-பாலிமர்களால் ஆனது.

கோப்பையில் சூடான தேநீரை அல்லது காப்பியை ஊற்றும் போது, மைக்ரோபிளாஸ்டிக் அடுக்கு கரைந்து, தேநீர் அல்லது காப்பியுடன் கலந்து நமது வயிற்றுக்குள் செல்கிறது.

ALSO READ | கொரோனாவை தடுப்பதில் BCG தடுப்பூசி பயனளிக்கும் என்கிறது புதிய ஆய்வு..!!!

25,000 மைக்ரான் அளவிலான (10 µm முதல் 1000 µm) மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் 100 மில்லி சூடான திரவத்தில் (85 - 90 டிகிரி சி)  கலப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆகையால், ஒரு சராசரி நபர் தினமும் 3 வழக்கமான கப் தேநீர் அல்லது காபி குடிக்கிறார் என வைத்துக் கொண்டால், ஒரு காகிதக் கப்பில், மனித கண்ணுக்குத் தெரியாத 75,000 சிறிய மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை உட்கொள்கிறார் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

இதனை உட்கொள்ளும்போது, ​​உடல்நல பாதிப்புகள் மிக தீவிரமாக இருக்கலாம் என இந்த ஆராய்ச்சி கூறுகிறது. மேலும் இவை சுற்று சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

சுற்றுச்சூழலை பாதிக்காத  பொருட்களை நாம் கண்டுபிடிக்க வேண்டும். இந்தியா பாரம்பரியமாக ஒரு சிறந்த வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் ஒரு நாடாக இருந்து வருகிறது. சுற்று சூழலை பாதிக்காத வகையில் அதே சமயம் உடலை பாதிக்காத வகையில், வாழை இலை, இலைகளால் செய்யப்பட்ட தொன்னைகள், தையல் இல்லை, போன்றவற்றால் ஆன பொருட்களை நமது முன்னோர்கள் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். அந்த வேர்களை மறக்காமல், அவர்களை கடைபிடித்து ஆரோக்கியமாக வாழ கற்றுக் கொள்வோம். அது தான் உடலுக்கும் நல்லது உலகுக்கும் நல்லது. 

ALSO READ | COVID-19 தடுப்பூசி பெற இந்தியர்கள் 2022 வரை காத்திருக்க வேண்டும்: AIIMS இயக்குனர்
 

Trending News