கொய்யா கனியை சாப்பிடுவதால் சுவை மற்றும் ஆரோக்கியமும் ஒன்றுசேர கிடைக்கும். ஆனால் கொய்யா மட்டுமல்ல, அதன் இலைகளும் ஆரோக்கியத்திற்கு சமமாக நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கொய்யா இலைகளில் ஆக்ஸிஜனேற்ற, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இதன் காரணமாக இது பல நோய்களுக்கு நன்மை பயக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீங்கள் அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள், ஆம்... கொய்யா (Guava) இலைகள் ஜலதோஷம் போன்ற பொதுவான பிரச்சினைகளையும், உயிருக்கு ஆபத்தான டெங்கு (Dengue)  காய்ச்சலையும் குணப்படுத்தும். கொய்யா இலைகள் வாய்வழி ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. ஈறுகளில் உங்களுக்கு ஏதேனும் வலி இருந்தால், கொய்யாவின் இலைகளை அரைத்து, கிராம்பு மற்றும் பாறை உப்பு ஆகியவற்றை கலந்து, சிறிது தண்ணீர் கலந்து கொதிக்க வைத்து பருக வேண்டும். இந்த சாறு ஈறுகளின் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவது மட்டுமல்லாமல், வாயிலிருந்து வரும் துர்நாற்றத்தையும் நீக்குகிறது.


ALSO READ | வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்படுவதும் கொரோனாவின் அறிகுறியா?


வயிற்றுப்போக்கு (Diarrhea) போன்ற பிரச்சினை நம் அனைவருக்கும் பொதுவான ஒன்று ஆகும்., ஆனால் வயிற்றுப்போக்கு காரணமாக தனி நபர் மிகவும் பலவீனமாக மாறக்கூடும். இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க நீங்கள் கொய்யா இலைகளை கொண்டு காபி தண்ணீர் தயாரித்து பருகுதல் நல்லது. 


ஆண்கள் கொய்யா இலையை டீ போட்டு குடித்து வந்தால், விந்தணுவின் உற்பத்தி அதிகரிப்பதோடு, விந்தணுவின் தரமும்  அதிகரிக்கும்.


கொய்யா இலைகளை நன்கு கழுவி சுடுதண்ணீரில் கொதிக்கவிட்டு தேநீர் போன்று குடித்து வந்தால் கொழுப்பை குறைக்கும். நீரிழிவை தடுக்கும், மேலும் வயிற்று போக்கினால் அவதிபடுபவர்களுக்கு சிறந்த சிகிச்சையளிக்கும். கொய்யா இலைசாறில் வயிற்று போக்குக்கு காரணமாக இருக்கக்கூடிய ஏரொஸ் பாக்டீரியா வளர்ச்சி தடுக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல கொய்யா இலையின் சாறு எடுத்து அதோடு தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வருவதால் விரைவில் உங்கள் உங்கள் எடை  குறைவதை நீங்கள் காணலாம்.


ALSO READ | டெங்கு, மலேரியா, கோவிட், பாம்புக்கடி அனைத்திலும் தப்பித்து எமனுக்கே சவால் விடும் இந்தியர்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR