வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்படுவதும் கொரோனாவின் அறிகுறியா?

காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் வாசனை உணர்வு இழப்புடன் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்படுவதும் கொரோனாவின் அறிகுறி என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 8, 2020, 07:36 AM IST
  • வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்படுவதும் கொரோனாவின் அறிகுறி என்று கூறப்படுகிறது
  • மலம் நீராகக் கழிவதும், ஒரு நாளில் மூன்று முறைக்குமேல் கழிவதும் வயிற்றுப் போக்கு
  • வயிற்றுப் போக்கினால் நீர் மற்றும் உடலுக்கு அத்தியாவசியமான தாதுப் பொருட்கள், உப்பு மற்றும் சத்துப் பொருட்கள் வெளியேறுகின்றன
வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்படுவதும் கொரோனாவின் அறிகுறியா?  title=

புதுடெல்லி: கொரோனா பெருந்தொற்று காரணமாக இன்று உலகே ஆடிப்போயிருக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனாவால் இதுவரை உலகைல் ஒரு கோடியே 16 லட்சத்தை தாண்டிவிட்டது.

கடுஞ்சுவாசக் கோளாறு நோயாக அறியப்படும் கொரோனாவைரஸ் 2 (SARS‑ CoV‑ 2) என்ற தீமை விளைவிக்கும் கிருமியின் காரணமாக ஏற்படும் கோவிட்‑19  பெருந்தொற்று நோய் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி கோவிட்-19 தொற்றை உலக அளவில் பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.  பிறகு மார்ச் 11 அன்று ஒரு பெருந்தொற்று என WHO அறிவித்தது.

கொரோனா பெருந்தொற்று ஏற்படுவதை காய்ச்சல், இருமல், சோர்வு, மூச்சுத் திணறல் மற்றும் வாசனை உணர்வு இழப்பு ஆகியவற்றின் மூலம் அறிந்துக் கொள்ளலாம். நோய் தீவிரமடையும்போது நிமோனியா மற்றும் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்படும் என்றும், இந்த அறிகுறிகள் வெளிப்படும் கால இடைவெளியானது ஐந்து முதல் பதினான்கு நாட்கள் வரை இருக்கலாம் என்று கூறப்பட்டது.

Also Read | உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம் புதுப்பிப்பு

ஆனால், தற்போது வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்படுவதும் கொரோனாவின் அறிகுறி என்று கூறப்படுவதால் பொதுமக்களின் அச்சம் மேலும் அதிகரித்துள்ளது.  ஏனெனில், காலநிலை மாற்றம், உணவு ஒவ்வாமை போன்றவற்றாலும் வயிற்றுப்போக்கும் வாந்தியும் ஏற்படலாம் என்னும் நிலையில் அவை கொரோனா என்ற பெருந்தொற்று நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்பது அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இன்னும் கோவிட்-19க்கு தடுப்பு மருந்து ஏதும் கண்டறியப்பட்டு, சந்தைப்படுத்தப்படாத நிலையில் கவனமாக இருப்பது ஒன்றே நம்மிடம் இருக்கும் ஒரே தேர்வு என்பது வருத்தமான உண்மை.

காலநிலை மாற்றத்துக்கு ஏற்றாற்போல் தன்னை தகவமைத்து கொள்கிறது கொரானா.  எனவே அண்மைத் தகவல்களின் படி, மலம் நீராகக் கழிவதும், ஒரு நாளில் மூன்று முறைக்குமேல் கழிவதும் வயிற்றுப் போக்கு எனச் சொல்லலாம். பொதுவாக, வயிற்றுப் போக்குஓரிரு நாளில் சரியாகிவிடும். வயிற்றுப் போக்கு அதிகமானால் உடலில் நீர் குறைந்து, வறட்சி ஏற்பட்டு, உடல் இயக்கம் பாதிக்கப்படும். குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு இத்தகைய நீர்வறட்சி உயிருக்கே ஆபத்தாலாம்.

Also Read | தமிழகத்தில் படிப்படியாக குறையும் கொரோனா; இன்று 3,616 பேருக்கு தொற்று உறுதி..!

வயிற்றுப் போக்குடன், வயிற்றில் வலி, அசௌகரியம், சூடு, குமட்டல் உடனடியாக மலம் கழிக்க வேண்டும் போன்ற உணர்வு, உடல்சூடு அல்லது ரத்தம் கலந்த வயிற்றுப் போக்கு ஏற்படாலாம்.

பொதுவாக பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளாலும் ஒட்டுண்ணிகளாலும் தீவிர வயிற்றுப் போக்கு ஏற்படும். தற்போது கொரோனா என்ற கொடுங்கிருமியாலும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது.  இதைத்தவிர, உடலில் உள்ள மற்ற நோய்களாலும் நாட்பட்ட வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

தொற்றுநோய்க் கிருமிகள் உணவு மற்றும் தண்ணீர் மூலமாக நமது உடலுக்குள் செல்கிறது. உணவுப் பொருட்களை ஜீரணிக்க முடியாத போதும் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

சில வகையான ஆன்டிபயாடிக் மருந்துகளும், பெருங்குடலில் எரிச்சல் மற்றும் தொற்றால் ஏற்படும் வியாதிகள் ஆகியவற்றாலும் வயிற்றுப் போக்கு ஏற்படலாம்.

Also Read | கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பந்தயத்தில் சீனா முன்னிலை!!

வயிற்றுப் போக்கின்போது மலத்துடன், நீர் மற்றும் உடலுக்கு அத்தியாவசியமான தாதுப் பொருட்கள், உப்பு மற்றும் சத்துப் பொருட்கள் வெளியேறுகின்றன. உடனே சரி செய்யாவிட்டால் இது ஆபத்தில் முடியலாம்.

தாகம், சிறுநீர் கழித்தல் குறைவது, எரிச்சலுடன் சிறுநீர் கழிவது, சிறுநீர் நிறத்தில் மாற்றம், உடல் சூடு, சருமம் உலர்தல், அசதி, தலைச் சுற்றல் ஆகியவை வறட்சியின் அறிகுறிகள் ஆகும்.

கொரோனாவுக்கு மருந்து இல்லை என்றாலும், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை சுலபமாக கட்டுப்படுத்திவிடலாம் என்பதால், அனைவரும் கவனமாக இருந்தால் அச்சப்படத் தேவையில்லை.

Trending News