நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்க இந்த உணவை சாப்பிடுங்கள்!
ஆளி விதைகள், பூசணிக்காய் விதைகள் மற்றும் ஷியா விதைகள் போன்ற விதைகளில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த கூடிய திறன் உள்ளது.
நீரிழிவு நோயின் தாக்கத்தை குறைக்க விரும்புபவர்கள் உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் அந்நோயின் தாக்கத்தினை குறைக்கலாம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை நீங்கள் தினமும் உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்வதன் மூலம் டைப்-2 வகை நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்கலாம். உங்கள் உணவில் தினமும் பச்சை காய்கறிகள் மற்றும் பச்சை கீரைகளை அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த பச்சை காய்கறிகளில் சல்ஃபரோபென் உள்ளது, ஐசோதியோசயனின் ஒரு வகை தான் இந்த சல்ஃபரோபென். இது நம் உடலிலுள்ள ரத்த சர்க்கரையை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
நட்ஸ் வகைகள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன, இவை நீரிழிவு நோய்க்கும் சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. ஒருவர் ஒரு நாளைக்கு 50கிராம் அளவு நட்ஸ் வகைகளை சாப்பிடுவதன் மூலம் உடலில் ஹீமோகுளோபின் உற்பத்தி அதிகரிப்பதோடு நீரிழிவு நோயின் தாக்கமும் குறைகிறது. புரோட்டீன், நார்சத்து, மினரல்ஸ் மற்றும் மெக்னீசியம் கலந்த பீன்ஸ், பட்டாணி போன்ற பருப்பு வகைகளை சாப்பிடுவது ரத்த சுரக்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இதனை சாப்பிடுவதன் மூலம் செரிமான மண்டலம் சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பிக்கிறது. ஆளி விதைகள், பூசணிக்காய் விதைகள் மற்றும் ஷியா விதைகள் போன்ற விதைகளில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த கூடிய திறன் உள்ளது. அதனால் தினமும் இதுபோன்ற விதைகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உங்கள் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
மேலும் படிக்க | சருமத்தில் சொறி, அரிப்பு தொல்லையா? இந்த வீட்டு வைத்தியங்களால் நிவாரணம் பெறலாம்
சிட்ரஸ் பழங்கள் உடலுக்கு நன்மையளிக்கும், அதிலும் குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த பழங்களாகும். இது ரத்த சர்க்கரை அளவையும் குறைக்க உதவுகிறது. கடல் உணவுகளில் நல்ல கொழுப்புகள், வைட்டமின்கள், மினரல்ஸ்கள், ஆன்டிஆக்சிடண்டுகள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உங்கள் செரிமான திறனை மேம்படுத்தி ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கிறது. அவகேடோ பழங்களின் நன்மையறிந்து தற்போது இதனை பரவலாக பயன்படுத்தி வருகின்றனர், இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் சர்க்கரை நோயின் தாக்கத்தினை குறைக்கிறது. அதேபோல ஓட்ஸ் போன்ற முழு தானியங்களை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதோடு எண்ணற்ற பலன்களை தருகிறது.
மேலும் படிக்க | மூளையை பாதிக்கும் ஆபத்தான பழக்கங்களுக்கு ‘NO’ சொல்லுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ