இந்த கடுமையான கோடைக்காலத்தில் சூரியனின் சுட்டெரிக்கும் வெயிலால் சருமம் கருத்துப்போவது, சோர்வடைந்து போவது என அழகுக்கு பலவிதமான சவால்கள் காத்திருக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிகப்படியான சூரிய ஒளியில் ஹைப்பர் பிக்மென்டேஷன், வறண்ட சருமம், தோல் கருத்துப் போவது என சருமம் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ள சுலபமான வீட்டு வைத்தியங்கள் உங்களுக்காக...


எலுமிச்சை சாறு மற்றும் தேன்


எலுமிச்சை சாறு ஒரு இயற்கையான ப்ளீச்சிங்காக செயல்படுகிறது, இது சன்-டானை அகற்ற உதவுகிறது.  எலுமிச்சை சாறு எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்க்கவும். அத்துடன் சிறிது சர்க்கரை சேர்த்து அன்கு கலக்கவும்.


இறந்த செல்களை வெளியேற்ற இந்தக் கலவை அற்புதமான பலனைத் தரும், இந்த கலவையைக் கொண்டு, சருமத்தின் மீது மெதுவாக ஸ்க்ரப் செய்யலாம். பிறகு, 20-30 நிமிடங்கள் உலர வைத்து அதன் பிறகு கழுவவும்.


மேலும் படிக்க | வாழைப்பழத்தின் உதவியுடன் முடிக்கு கெரட்டின் கிரீம்


கடலை மாவு சருமத்தை அழகாக மின்னச் செய்யும். கடலை மாவு + மஞ்சள் சேர்ந்தால், அது அழகான சருமத்தைக் கொடுக்கும். இந்த இரண்டு அற்புதக் கலவையுடன் தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் கூட்டணி வைத்தால், உங்கள் சருமத்தை மிருதுவாக்கும்.


கடலை மாவு, தயிர் மற்றும் மஞ்சள் சேர்த்து நன்றாக கலக்கி, கலவையை தோலில் தடவவும். 15 நிமிடங்கள் உலர வைத்து, கழுவவும்.



பப்பாளி, தக்காளி, தர்பூசணி, உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளரி


பப்பாளியில் உள்ள மருத்துவ பண்புகள் மற்றும் இயற்கை என்சைம்கள் நல்ல இயற்கையான ப்ளீச்சிங் ஏஜெண்டாக வேலை செய்கிறது. உருளைக்கிழங்கு சாறு அருமையான ப்ளீச்சிங் செய்யும் காய் என்பதை மறந்துவிடக்கூடாது.


கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை ஒளிரச் செய்யும் உருளைக்கிழங்கும், ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்கு பெயர் பெற்ற தக்காளியும் சருமத்தின் அழகை மேம்படுத்தும் பண்புகளைக் கொண்டவை. இந்த இரண்டு காய்கனிகளுடன் வெள்ளரிக்காய் கூட்டு வைத்துக் கொண்டால், முகத்தின் பிரகாசம் பலமடங்கு அதிகமாகும். 


பழுத்த பப்பாளி, தர்பூசணி, உருளைக்கிழங்கு, தக்காளி மற்றும் வெள்ளரி ஆகியவற்றை மிக்ஸியில் அடித்து, அந்தக் கலவையை ஐஸ் ட்ரேயில் ஊற்றி ப்ரீஸரில் வைத்து விடவும்.


தேவைப்படும்போது, அதில் இருந்து 4-5 க்யூப்ஸ் எடுத்துக் கொள்ளவும். ஐஸாக இருக்கும் கலவை குளிர்ந்தபிறகு அந்த கலவையை சருமத்தில் தடவி, மசாஜ் செய்யவும். 



மைசூர் பருப்பு, மஞ்சள் மற்றும் பால்
பப்பாளி, தக்காளி, தர்பூசணி, உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளரி


மைசூர் பருப்பை பச்சை பாலில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். ஊறவைத்த பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்யவும். தோலின் மேல் தடவி அது காய்ந்த வரை விடவும். பின்னர் கழவினால் சருமத்தின் மென்மை, உங்களை நீங்களே காதலிக்கச் செய்யும்.


மேலும் படிக்க | வெள்ளை முடியை விரட்ட அற்புதமான இயற்கை வீட்டு வைத்தியம்


காபி மற்றும் தேங்காய் எண்ணெய் மற்றும் சர்க்கரை


காபி சருமத்திற்கு பல நன்மைகளைக் தருகிறது. காபி முகப்பருவை அகற்ற உதவும் காபித்தூள், சருமத்தில் ஏற்படும் கோடுகளைக் குறைப்பதற்கும் உதவுகிறது.


இந்த காபியுடன் சருமத்தை ஈரப்பதமாக்கும் தேங்காய் எண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து கெட்டியான பேஸ்ட் செய்து 10 நிமிடம் ஸ்கரப் செய்யவும். 10 நிமிடம் கழித்து சருமத்தை கழுவவும். மின்னும் சருமம் உங்களுடையதே.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR