உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவு இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.  இதனை ஸ்லோ பாய்சன் என்றும் கூறலாம், ஏனெனில் இவை அறிகுறிகள் எதையும் வெளிப்படுத்தாமல் நமக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.  எல்லா வகையான கொலஸ்ட்ராலும் உடலுக்கு தீங்கை இழைக்காது, கொலஸ்ட்ராலை எல்டிஎல்,  ஹெச்டிஎல் என  வகைகளாக பிரிக்கலாம்.  எல்.டி.எல் கெட்ட கொலஸ்ட்ரால் என்றும், ஹெச்டிஎல் நல்லது கொலஸ்ட்ரால்  என்று கருதப்படுகிறது.  அதிகப்படியான கொழுப்புகள் இரத்த நாளங்களில் படிந்து தமனிகள் வழியாக இரத்த ஓட்டத்தை தடை செய்கிறது.  இவ்வாறு கொழுப்புகள் படிவதால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சுயஇன்பத்தின் போது இந்த தவறை மட்டும் செய்யாதிங்க!


உடலில் கொழுப்பின் சீரான அளவை பராமரிப்பது முக்கியம், ஏனெனில் இது தமனிகளில் கொழுப்பை உருவாக்கி, கைகள் மற்றும் கால்களுக்கு இரத்த ஓட்டம் குறைவதற்கு வழிவகுக்கும்.  இந்த நிலை பெரிஃபெரல் ஆர்டரி நோய் (PAD) என்றும் அழைக்கப்படுகிறது, இது கடுமையான வலியை ஏற்படுத்துகிறது.  அதனால் சிலருக்கு கை, கால் வலி ஏற்படலாம்.  இதற்கு சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால் நீங்கள் கையால் ஒரு செயலை செய்யும்பொழுது அதிகமான வலி ஏற்படும், இந்த வலி ​​லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம், பின்னர் சில நிமிடங்களில் வலி மறைந்தும் போகலாம்.  அதேபோல அதிக கொலஸ்ட்ரால் காரணமாக இரண்டு கால்களும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுகின்றன, இருப்பினும் ஒரு காலில் மட்டும் மோசமான வலி இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.



அதேசமயம் கொலஸ்டராலால் மட்டுமே கைகளில் வலி ஏற்படுமா என்றால் இல்லை, மற்ற விஷயத்திற்காகவும் வலி ஏற்படலாம்.  கை மற்றும் தோள்பட்டை வலி மாரடைப்பு மற்றும் ஆஞ்சினாவின் அறிகுறிகளில் ஒன்றாகும்.  மேலும் கை வலிக்கான காரணங்கள் எலும்பு தசை காயம், திரிபு, சுளுக்கு போன்றவற்றாலும் ஏற்படலாம்.  அதிக கொழுப்பினால் கைவலி தவிர கால்களில் உணர்வின்மை அல்லது பலவீனம், கால்களில் முடி உதிர்தல், கால் நகங்கள் பலமின்மை, கால்களில் ஆறாத புண்கள், தோல் நிறத்தில் மாறுபாடு போன்றவை ஏற்படலாம்.  கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளதா என்பதை பரிசோதிக்க விரும்புவோர், லிப்பிட் பேனல் அல்லது லிப்பிட் ப்ரொபைல் என்றும் அழைக்கப்படும் இரத்தப் பரிசோதனையைப் செய்துகொள்ளலாம்.  45 முதல் 65 வயதுக்கு இடைப்பட்ட ஆண்களும், 55 முதல் 65 வயதுக்கு இடைப்பட்ட பெண்களும் ஒன்று முதல் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. 


உடலில் தாங்கும் அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைக்க தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும், உணவு கட்டுப்படும் ரொம்ப முக்கியம்.  உங்கள் வாழ்க்கை முறையை மாற்றியமைத்து கொள்ளவேண்டும், இதயத்திற்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.  எண்ணெயில் வறுத்த பொறித்த உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடாது, சர்க்கரை நிறைந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும்.  தினசரி நடைப்பயிற்சி சென்றாலும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும், அதோடு புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை கட்டுப்படுத்த வேண்டும்.


மேலும் படிக்க | நீரழிவு நோயாளிகள் இந்த காய்கறிகளை மட்டும் தவறாமல் சாப்பிடுங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ