வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சரி, பசியின்மை, தூக்கம் இன்மை, மந்தம் போன்ற பல்வேறு சிக்கல்கள் இருக்க நேரிடும். அவர்கள் கண்டிப்பாக வயிற்றை சுத்தம் செய்ய வேண்டும். இயற்கை முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே வயிற்றை சுத்தம் செய்யலாம். அதாவது. காலை எழுந்தவுடன் ஒரு பாத்திரத்தில் மூன்று லிட்டர் தண்ணீர் கொதிக்க வைக்கவும். பிறகு நன்கு கொதித்த அந்த தண்ணீரில், மூன்று எலுமிச்சை பழங்களை பிழிந்து விடுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கோடையை சுவையானதாக்கும் ஆரோக்கியமான இந்திய சாலட்கள்


அதனுடன் மூன்று ஸ்பூன் கல்உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். வெதுவெதுப்பாக வெறும் வயிற்றில் ஒரு அரை லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். தண்ணீர் உள்ளே சென்ற சிறிது நேரத்தில் கழிவறை செல்லத் தூண்டும். இல்லையெனில், பத்து நிமிடம் கழித்து, மேலும் சிறிதளவு தண்ணீரை அருந்தவும். ஐந்து நிமிடங்களில் கழிவறை செல்வது நிச்சயம். சென்று வந்துடன், மீண்டும் எலுமிச்சை உப்பு நீர் கலவையை எவ்வளவு குடிக்க முடியுமோ அவ்வளவு அருந்துங்கள்.


சில நிமிடங்களில், மறுபடியும் மலம் கழியும். இதேபோல் நான்கு, ஐந்து முறை இந்த கலவையை முடிந்த அளவு அருந்தினால், அத்தனை முறையும் கழிவறை செல்வது நிச்சயம். நீர் அருந்துவதை நிறுத்தினால், மலம் கழிவது நின்றுவிடும். இந்த முறையில் வயிறு இயற்கையான முறையில் சுத்தம் செய்யப்படும். குடல் வலுப்பெறும். சாப்பிடும் உணவு உடம்பில் தங்கும். நன்கு செரிமானம் ஆகும்.


மேலும் படிக்க | அடடா பார்லியில் இத்தனை ஊட்டச்சத்து இருக்கா: தெரியாம போச்சா


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR