இந்தியா முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் சோளம் என்பது ஜவாரி, ஜோவர், ஜோலா மற்றும் ஜோன்தலா என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி ரொட்டி, தோசை, உப்புமா போன்ற பல  வகை உணவு வகைகளை தயாரிக்கலாம். இது மிகவும் சுவையானதாக இருக்கும். சோளம் ஒரு பசையம் இல்லாத உணவாகும். எனவே இதை உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது மட்டுமின்றி, உங்கள் இரத்த சர்க்கரையை அளவையும் மிக சிறப்பாக கட்டுப்படுத்துகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்கா சோளம் ஒரு முழு தானியமாகும், இது தாதுக்கள், புரதம், நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், மாங்கனீஸ், துத்தநாகம், இரும்புச்சத்து, செம்புச் சத்து போன்ற பல வகையான உடலுக்கு  அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்திருக்கின்றன. அதனால் தான் மக்கா சோளத்தை உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியம் பல நன்மைகளை ஏராளமாக பெறலாம். மக்காச்சோளத்தை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவதால் நார்ச்சத்து நமக்கு முழுமையாக கிடைக்கின்றது. இந்த நார்ச்சத்து மூலநோய் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மக்காச்சோளத்தில் இருக்கும் இந்த நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. வயிற்றில்  செரிமான அமிலங்கள் சுரப்பை சரிசெய்து உண்ணும் உணவுகள் நன்றாக ஜீரணம் ஆக வழிவகை செய்கிறது.


மக்கா சோள உப்புமா செய்ய தேவையான பொருட்கள்:


1 கப் மக்கா சோள ரவை
1/2 கப் வெங்காயம் பொடியாக நறுக்கியது
1/2 கப் ரவை
1/2 கப் வேகவைத்த பச்சை பட்டாணி (விரும்பினால்)
1/2 கப வேக வைத்த காய்கறிகள் (பீன்ஸ், கேரட், போன்றவை)
2 டீஸ்பூன் பச்சை மிளகாய் விழுது
2 டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
1-2 சிட்டிகை பெருங்காயம்
1 தேக்கரண்டி கடுகு 
1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
8-10 கறிவேப்பிலை நறுக்கியது
1 எலுமிச்சை
1-2 டீஸ்பூன் எண்ணெய்
ருசிக்கு ஏற்ப உப்பு


மேலும் படிக்க |  கலோரிகளை எரித்து உடல் பருமனை குறைக்கும் ‘ஆயுர்வேத பொடியை’ தயாரிக்கும் முறை!


மக்கா சோள உப்புமா செய்வது எப்படி


1.மக்கா சோள மாவு செய்ய முதலில் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை எடுத்து பொடியாக நறுக்கவும்.


2. பிறகு பட்டாணியை தோல் நீக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வேகவைக்கவும். அதனுடன் கேரட், பீன்ஸ் போன்றவற்றையும் சேர்த்து வேக வைக்கவும்.


3. அதன் பிறகு, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.


4. பிறகு அதில் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.


5. அதன் பிறகு கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்.


6. பிறகு வெங்காயத்தை கடாயில் போட்டு 1 நிமிடம் வதக்கவும்.


மேலும் படிக்க | வெறும் வயிற்றில் பூண்டையும், தேனையும் சேர்ந்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் இவை!


7. அதன் பிறகு அதில் ரவையை போட்டு மிதமான தீயில் வறுக்கவும்.


8. பிறகு அதில் மக்கா சோள ரவையை போட்டு கிளறி 2 நிமிடம் வதக்கவும்.


9. அதன் பிறகு, பச்சை மிளகாய் விழுது, பட்டாணி, கொத்தமல்லி இலைகள் மற்றும் உப்பு சேர்த்து சுவைக்க வேண்டும். வேக வைத்த காய்கறிகளையும் சேர்க்கவும்


10. பிறகு 3 கப் (தேவைக்கேற்ப) கொதிக்கும் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.


11. அதன் பிறகு, மிதமான தீயில் சுமார் 2-3 நிமிடங்கள் சமைக்கவும்.


12. பிறகு இறுதியாக அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கேஸை அணைக்கவும்.


13. இப்போது உங்கள் சுவை மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த மக்கா சோள உப்புமா தயார்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறவும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | எடையை குறைக்க சூப்பர் வழி: இந்த பழங்களுக்கு கண்டிப்பா நோ சொல்லிடுங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ