பச்சை கொத்தமல்லி நமது உணவில் நாம் அதிகமாக பயன்படுத்தும் ஒரு பொருளாகும். சாம்பார், ரசம் என பல வித உணவுகளில் இதை வாசனைக்காகவும், ருசிக்காகவும் பயன்படுத்துகிறோம். இதைத் தவிர, இதன் சட்னியும் மிகவும் சுவையாக இருக்கும். தினசரி உணவில் கொத்தமல்லி இலையையும் தனியாவையும் பயன்படுத்துவது மிகவும் நல்லது. கொத்தமல்லி உணவின் ருசியையும், தோற்றத்தையும் மேம்படுத்துவது மட்டுமல்லாமல், அது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கிறது. அதிசயிக்க வைக்கும் பல ஆரோக்கிய நன்மைகள் இதில் உள்ளன.
கொத்தமல்லி அனைவரது சமையலறையிலும் காணப்படும் ஒரு பொருளாகும். நீரிழிவு போன்ற நோய்களுக்கு இது ஒரு நல்ல மருந்தாக உள்ளது. கொத்தமல்லி சாறில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி மற்றும் மெக்னீசியம் ஆகியவை ஏராளமாக உள்ளன. இந்த கூறுகள் அனைத்தும் நோய்களையும் எதிர்த்து போராடும் ஆற்றலை உடலுக்கு அளிக்கின்றது. கொத்தமல்லி சாற்றை குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. அது குறித்த சிறப்பு தகவல்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கொத்தமல்லி அதிக நன்மைகளை அளிக்கின்றது. இதன் தண்ணீரை குடிப்பதால் ரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவு கட்டுப்படும். கொத்தமல்லி இலைகள் அல்லது விதைகளை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அதன் தண்ணீரை குடிக்கவும்.
கொத்தமல்லியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் எத்தனால் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது சீரம் குளுக்கோஸ் அல்லது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
சர்க்கரை காரணமாக உங்கள் எடை அதிகரித்திருந்தால், கொத்தமல்லி விதைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் அதிக நன்மைகளைப் பெறலாம். இதற்கு, மூன்று தேக்கரண்டி கொத்தமல்லியை ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்றாக கொதித்து பாதியாக குறைந்த பின்னர், வடிகட்டி, குடித்தால் உடல் எடை குறையும்.