நரை முடி முற்றிலும் கருப்பாக மாற இயற்கை வீட்டு வைத்தியம்
Black Hair Tips: ஒரு வயதுக்குப் பிறகு, முடி நரைப்பதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை, ஆனால் இளம் வயதினரின் தலையில் வெள்ளை முடி வரத் தொடங்கும் போது, அது டென்ஷனாக மாறத் தொடங்கும். அத்தகைய சூழ்நிலையில், சில வீட்டு வைத்தியங்களின் உதவியுடன், நீங்கள் கருப்பு முடியை மீண்டும் பெறலாம்.
மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் முடி பிரச்சனை பொதுவானது. இதில் வெள்ளை முடி பிரச்சனை மிகவும் பொதுவானதாக மாறிவிட்டது. தற்போது, 20 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களும் இதனால் சிரமப்படுகின்றனர். பெரும்பாலும் அவர்கள் வெள்ளை முடியை மறைக்க ஹேர் டை அல்லது கெமிக்கல் பேஸ்டு ஹேர் கலர் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர், ஆனால் இது முடியை உயிரற்றதாக மாற்றிவிடும். எனவே நீங்களும் வெள்ளை முடியை இயற்கையாகவே கருப்பாக்க விரும்பினால், இந்த வைத்தியத்தை பின்பற்றுங்கள்.
முடியை கருப்பாக்க இந்த பொருட்களை பயன்படுத்தவும்
1. வெங்காய சாறு மற்றும் ஆலிவ் எண்ணெய்
தலையில் உள்ள வெள்ளை முடியை கருப்பாக மாற்ற வெங்காய சாறு பயனுள்ளதாக கருதப்படுகிறது. மேலும் இது முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. இதற்கு முதலில் ஆலிவ் எண்ணெயில் வெங்காய சாறு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். இது முடியை வலுவாக்கும் மற்றும் வெள்ளை முடியை குறைக்கும்.
மேலும் படிக்க | குங்குமப்பூ பெண்களின் ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதம், கட்டாயம் ட்ரை பண்ணுங்க
2. பிளாக் டீ
பிளாக் டீயை பயன்படுத்தி, இயற்கையாகவே முடியை கருப்பாக்கலாம். ஏனெனில் அவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்துள்ளன, இது முடியை கருமையாக்க உதவுகிறது. இதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் 2 ஸ்பூன் பிளாக் டீ மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். இப்போது அதை வடிகட்டி, இந்த நீர் ஆறியதும், உங்கள் தலைமுடியில் தடவவும்.
3. தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு
தேங்காய் எண்ணெய் முடியை இயற்கையாக வலுப்படுத்த உதவுகிறது. தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு கலந்து முடியை மசாஜ் செய்யவும். இதனை தொடர்ந்து பயன்படுத்தினால் வெள்ளை முடி வருவதை குறைக்கலாம்.
4. இஞ்சி மற்றும் தேன்
இஞ்சி மற்றும் தேன் கலவையானது முடியை கருமையாக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு இஞ்சியை துருவி, அதில் தேன் கலந்து கொள்ளவும். இப்போது இந்த பேஸ்ட்டை முடியில் தடவவும். சுமார் அரை மணி நேரம் கழித்து தண்ணீரில் கழுவவும். இந்த செயல்முறையை வாரத்திற்கு இரண்டு முறையாவது செய்ய வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாக இல்லை. பொதுவான விழிப்புணர்வு மட்டுமே வழங்கப்படுகிறது. இதனை கடைபிடிக்கும் முன் நிபுணர்களிடம் ஆலோசனை செய்யவும். ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)
மேலும் படிக்க | பெருங்காயம்: இதை இப்படி பயன்படுத்தினால், 3 பிரச்சனைகள் ஆகும் மாயம், விவரம் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ