வீட்டிலேயே தயாரிக்கப்படும் ஹேர் மாஸ்க்: இன்றைய காலகட்டத்தில் கூந்தல் தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றுக்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற உணவு, தூசி, அழுக்கு, பதற்றம், மாசுபாடு, வானிலை மாற்றம் மற்றும் சூரிய ஒளி போன்றவற்றைக் கூறலாம். இது தவிர, மக்கள் ரசாயன அடிப்படையிலான முடி தயாரிப்புகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள். எனவே கூந்தலை பாதுகாக்க இயற்கையான பொருட்களை மட்டுமே பயன்படுத்துவது முக்கியமாகும், இவை கூந்தலை பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் வைத்திருக்க உதவும். அந்தவகையில் கூந்தலின் அழகை அதிகரிக்கவும், பல பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் உதவியாக இருக்கும் ஹேர் மாஸ்க்குகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.
கூந்தலுக்கு ஸ்பெஷல் ஹேர் மாஸ்க்
1. தேன் வைத்து ஹேர் மாஸ்க்
தேன் நம் சருமத்திற்கும் கூந்தலுக்கும் மிகவும் நன்மை பயக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம், அதனால்தான் இது பல அழகு சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது. அந்தவகையில் தேனினால் செய்யப்பட்ட ஹேர் மாஸ்க் உதவியுடன், உலர்ந்த, உயிரற்ற மற்றும் சேதமடைந்த கூந்தலை மேம்படுத்தலாம்.
மேலும் படிக்க | Diabetic Diet: இவற்றை உணவில் சேருங்கள், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்
செய்முறை: இதற்கு, 2 டீஸ்பூன் தேன், 2 டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த மூன்றையும் ஒரு பாத்திரத்தில் கலந்து ஈரமான கூந்தலில் தடவி, அரை மணி நேரம் அப்படியே ஊற வைக்கவும். இறுதியில் சுத்தமான தண்ணீரில் முடியை கழுவவும்.
2. இலவங்கப்பட்டை ஹேர் மாஸ்க்
இலவங்கப்பட்டை கூந்தலுக்கு மிகவும் ஒரு முக்கியமான ஆயுர்வேத மருந்தாக கருதப்படுகிறது.
செய்முறை: இந்த ஹேர் மாஸ்க்கை தயாரிக்க, இலவங்கப்பட்டை தூள் மற்றும் தேங்காய் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் நன்கு கலக்கவும். இப்போது இந்த ஹேர் மாஸ்க்கை இரவு தூங்கும் முன் முடியில் தடவி காலை வரை அப்படியே விடவும். தூங்கி எழுந்தவுடன் தலைமுடியைக் கழுவவும். இது கூந்தலுக்குப் புதிய பொலிவைத் தருவது மட்டுமின்றி, முடி உதிர்வு பிரச்சனையும் முடிவுக்கு வரும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | தேன் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவு குறையுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ