உடலுறவும், பாலியல் ரீதியான இன்பமும் உணவு போன்று மனிதர்களின் அடிப்படை தேவைகளில் ஒன்று. பசிக்கும்போது உணவை உட்கொள்ளும் மனிதர்கள் பாலியல் ரீதியான எண்ணம் தோன்றும்போது உடலுறவு கொள்வதும், சுய இன்பம் செய்வதும் தவிற்க முடியாத ஒன்று. பலர் சுய இன்பம் செய்வது மிகவும் தவறான விஷயம், அப்படி செய்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்றெல்லாம் நினைக்கின்றனர். உண்மையில் சுய இன்பம் செய்வது உடல் ஆரோக்கியத்திற்கும், நிம்மதியான தூக்கத்திற்கும், சுறு சுறுப்பான வாழ்க்கை முறைக்கும் உகந்தது என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. சுய இன்பம் செய்வது சரிதான் ஆனால் அதை எவ்வாறு செய்வது, சுய இன்பத்தின்போது ஆண்களும், பெண்களும் செய்யும் தவறுகள் என்ன.. அதை எப்படி திருத்திக்கொள்ளாம் என பார்க்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பல பிரச்சனைகளின் ஒரே நிவாரணம் வேம்பு: இப்படி பயன்படுத்தி பாருங்கள்


 


நான் ஒன்றுக்கு எத்தனை முறை சுய இன்பம் செய்யலாம்


தனிமையில் இருக்கும்போது சுய இன்ப எண்ணம் தோன்றும்போது நாள் ஒன்றுக்கு பல முறை சுய இன்பம் செய்யும் ஆண்களும், பெண்களும் இருக்கலாம். அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் பல முறை சுய இன்பம் செய்வது தவறு அல்ல, ஆனால் நீங்கள் அப்படி செய்யும்போது நாளடைவில் பாலியல் இன்பத்தில் இருக்கும் ஈடுபாடு குறைந்து விடும் எனவும் வரும் காலத்தில் உங்கள் இணையுடன் உடலுறவு கொள்ள அந்த ஆர்வம் இண்மை தடையாக அமைந்து விடும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.  


சுய இன்பம் செய்யும்போது நேரத்தை திட்டமிடல் 


சுய இன்பம் ஒரு அர்புதமான உணர்வு. ஒரு இணையுடன் உடலுறவு கொள்ளும் அதே இன்பதை சுய இன்பமும் தருகின்றது. ஆனால், உடலுறவுக்கு எடுத்துக்கொள்ளும் நேரத்தை பலரும் சுய இன்பத்திற்கு எடுத்துக்கொள்வது இல்லை. நீங்கள் சுய இன்பம் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றீர்கள் என்றால் அதற்கு முன்பாக அமைதியான மனநிலையை ஏற்படுத்துங்கள், விளக்குகளை அனைத்து மெதுவாக உங்கள் சுய இன்பத்தை தொடங்கலாம். 


எந்த நிலையில் சுய இன்பம் செய்யலாம்


சுய இன்பத்தை ஒரே மாதிரியான நிலையில் அமர்ந்தோ அல்லது படுத்துக்கொண்டோதான் செய்ய வேண்டும் என்பது இல்லை. உடலுறவு செய்யும்போது பல்வேறு நிலைகளை விரும்பும் நாம் அதேபோன்று சுய இன்பத்தின்போதும் பல்வேறு நிலைகளை தேர்வு செய்து முயற்சிக்கலாம். அது உங்களுக்கு பாலியல் இன்பத்தின் மீதான ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்யும். அது மட்டும் இன்றி உங்கள் இணையை திருப்திபடுத்த உதவியாகவும் இருக்கும். அது மட்டும் இன்றி சுய இன்பத்தின்போது, யோனி அல்லது ஆண்குறியில் மட்டும் கவனம் செலுத்தாமல் உங்கள் உடலின் பிற உறுப்புகளையும் தூண்டி விடுங்கள். 


சுய இன்பத்திற்கு மாற்றாக என்ன செய்யலாம்


சுய இன்பத்தில் ஈடுபடும் ஆண்களும் சரி பெண்களும் சரி சந்தைகளில் கிடைக்கும் செக்ஸ் பொம்மைகளை பயன்படுத்தலாம். இது உங்களுக்கு பாதுகாப்பான செக்ஸ் இன்பத்தை தரும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேபோல் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை சுய இன்பம் செய்யலாம். அதை தாண்டி சுய இன்பத்தில் ஈடுபடும்போது அதன் மீதான ஆர்வம் குறைய வாய்ப்பு உள்ளது. 


மேலும் படிக்க | Male Infertility:உஷார் ஆண்களே!! இவை மலட்டுத்தன்மைக்கு காரணமாகலாம்!!


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ