பல பிரச்சனைகளின் ஒரே நிவாரணம் வேம்பு: இப்படி பயன்படுத்தி பாருங்கள்

Neem Leaves For Health Care: முழுமையான பலனை பெற வேப்பம்பூவை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் அதன் பயன்கள் என்ன என்பது பற்றியும் இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 29, 2022, 05:05 PM IST
  • வேப்ப எண்ணெய் மற்றும் ஃபேஸ் பேக் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றது.
  • இது சருமத்தை புத்துணர்ச்சியுடன் இருக்க வைக்கிறது.
  • தினமும் காலையில் வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை மென்று சாப்பிட்டால் சர்க்கரை நோய் பிரச்சனை வராது.
பல பிரச்சனைகளின் ஒரே நிவாரணம் வேம்பு: இப்படி பயன்படுத்தி பாருங்கள் title=

உடல் ஆரோக்கியத்திற்கு வேப்ப இலைகள்: வேப்ப இலைகள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். வயிற்றில் இருந்து முடி, தோல் அல்லது பற்கள் என எந்த ஒரு உறுப்பில் பிரச்சனை இருந்தாலும் வேம்பு சாப்பிடுவது உங்களுக்கு நன்மை பயக்கும். வேம்பின் முழுமையான பலன்களை பெற அதை சரியான வழியில் பயன்படுத்த வேண்டும். முழுமையான பலனை பெற வேப்பம்பூவை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் அதன் பயன்கள் என்ன என்பது பற்றியும் இந்த பதிவில் காணலாம். 

வேப்பம்பூவின் நன்மைகள் என்ன?

- வேம்பு துவர்ப்பான சுவை கொண்டது. இது உங்கள் சருமத்தில் தளர்ச்சியை நீக்க உதவுகிறது. 

- வேப்ப எண்ணெய் மற்றும் ஃபேஸ் பேக் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றது. இது சருமத்தை புத்துணர்ச்சியுடன் இருக்க வைக்கிறது.

மேலும் படிக்க | காலையில் இந்த இலையை சாப்பிட்டால் இந்த குறைபாடு நீங்கிவிடும்

- அதிக முகப்பரு உள்ளவர்களுக்கும் எண்ணெய்பசை உள்ள சருமத்திற்கு வேம்பு ஒரு சிறந்த வழியாகும்.

- வேப்பம்பூ பேஸ்ட் தோல் எரிச்சலைத் தணிக்கும். சூரிய ஒளி, தோல் பதனிடுதல், சரும வறட்சி போன்றவற்றை நீக்க இதைப் பயன்படுத்தலாம். நீர்ச்சத்து குறைந்த சருமத்தில் தயிர் அல்லது தேன் கலந்து வேப்பம்பூவை தடவ வேண்டும்.

வேப்ப இலைகளை ஏன் சாப்பிட வேண்டும்?

- புதிய இளசான வேப்ப இலைகளை பலர் சாப்பிடுவதை நாம் பார்த்துள்ளோம். வெளிர் மெரூன் நிறத்தில் இருக்கும் வேம்பின் புதிய இலைகளை மென்று சாப்பிட கசப்பாக இருக்காது. மேலும் இவை ஆரோக்கியமாக இருக்க ஒரு நோய் தீர்க்கும் மருந்தாகும்.

- தினமும் காலையில் வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை மென்று சாப்பிட்டால் சர்க்கரை நோய் பிரச்சனை வராது.

- வேப்ப இலையை தினமும் சாப்பிட்டு வருபவர்களின் செரிமானம் சீராக இருக்கும்.

- வேப்ப இலைகளை உண்பதால் நுரையீரல் பாதுகாப்பாக இருக்கும். மேலும் இவற்றால் சுவாச நோய்கள் வராது.

- வேம்பின் காரணமாக சோர்வு இல்லாமல் இருக்கும். மனநிலை புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

- உடலில் ஏற்படும் காயங்கள் விரைவில் குணமாகும்.

- வாந்தி சங்கடம் மற்றும் குமட்டல் பிரச்சனை இருக்காது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் பற்றிய அச்சமா? இந்த 5 உணவுகள் உங்களை காக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News