உணவகங்களில் உண்பது அதிகமாக இருக்கும் காலம் இது. ஆனால், ஹோட்டல்களிலும், பெரிய உணவகங்களிலும் உண்பது எந்த அளவு பாதுகாப்பானது என்ற கேள்விகளை எழுப்பும் சம்பவங்கள் அவ்வப்போது வெளிவருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிலும் உலகப் புகழ்பெற்ற உணவகங்களிலும் கவனக்குறைவும் அலட்சியமும் காணப்படுவது அதிர்ச்சி ஏற்படுத்துகிறது. மெக்டொனால்ட்ஸ், பர்கர் கிங், பீட்சா ஹட், டோமினோஸ், டகோ பெல் மற்றும் சிபொட்டில் உள்ளிட்ட பிரபல உணவகங்களில் மாமிச உணவுகளில், மிக அதிக அளவில் பித்தலேட்டுகள் (phthalates) எனப்படும் ரசாயனம் இருந்தன.


இந்த உணவகங்களில் தயாரிக்கப்பட்ட பிரெஞ்ச் ஃப்ரைஸ் மற்றும் சீஸ் பீட்சா ஆகியவற்றிலும் பித்தலேட்டுகள் (phthalates) இருந்தன. பிளாஸ்டிக்கை நெகிழ்வடையச் செய்வதற்கு பயன்படுத்தப்படும் ரசாயனமான பித்தலேட்டுகள் உணவில் கலந்திருப்பது அண்மையில் மேற்க்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.  


ஆஸ்துமா ஏற்படுவதற்கான 80 சதவிகிதம் வாய்ப்புகள் உள்ள பித்தலேட்டும், பெண்களின் கருவுறுதலை 70 சதவிகிதம் பாதிக்கும் ரசாயனமும் இந்த உணவுகளில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


Read Also | மருக்களை நீக்க எளிய இயற்கையான வழிமுறை


இறைச்சியைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களில் பித்தலேட்டுகள் அதிகமாகவும், பிரெஞ்ச் ஃப்ரை மற்றும் சீஸ் பீட்சா ஆகியவற்றில் குறைவாகவும் இந்த ரசாயனங்கள் இருக்கின்றன. பிரபலமான இந்த உணவு நிறுவனங்களின் ஹாம்பர்கர்கள், ஃப்ரைஸ், சிக்கன், சிக்கன் பர்ரிடோக்கள் மற்றும் சீஸ் பீட்சா உட்பட மொத்தம் 64 உணவு மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன 


80% உணவுகளில் DnBP எனப்படும் பித்தலேட் இருப்பதைக் கண்டறிந்தனர். 70% உணவுகளில் பித்தலேட் DEHP காணப்பட்டது. இந்த இரண்டு ரசாயனங்களும் இனப்பெருக்க சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துபவை.  


மனித உடலில் உள்ள எண்டோகிரைன்-ஐ (endocrine) சீர்குலைக்கும் இந்த பித்தலேட்டுகள் என்ற ரசாயனங்கள், வழக்கமாக அழகுசாதனப் பொருட்கள், வினைல் தளங்கள், சோப்புகள், டிஸ்போசபிள் கிளவுஸ்கள் மற்றும் உணவுகளை பொட்டலமிடும் பொருட்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.


பிளாஸ்டிக்கை மிருதுவாகவும் நெகிழும் தன்மை கொண்டதாகவும் மாற்றும் பண்பைக் கொண்டுள்ளதால், பரவலாக பயன்படுத்தப்படும் இந்த ரசாயனங்கள் குழந்தைகளுக்கு இனப்பெருக்க பிரச்சினைகள், ஆஸ்துமா மற்றும் மூளைக் குறைபாடு உள்ளிட்ட கடுமையான உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன.


Read Also | குளிர்காலத்தில் உங்களை healthy ஆக வைக்கும் உணவுகள் இதோ


ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகம், தென்மேற்கு ஆராய்ச்சி நிறுவனம் (சான் அன்டோனியோ, டெக்சாஸ்), பாஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் தொற்றுநோயியல் இதழில் (Journal of Exposure Science & Environmental Epidemiology) இந்த வாரம் வெளியிடப்பட்டது.


சிக்கன் பர்ரிடோக்கள் மற்றும் சீஸ் பர்கர்கள் போன்ற இறைச்சி கொண்ட உணவுகளில் அதிக அளவு ரசாயனங்கள் இருந்த நிலையில், சீஸ் பீட்சாவில் மிகக் குறைந்த அளவில் பாதிப்பூட்டும் ரசாயனங்கள் இருந்தன.
 
ஆய்வில் கண்டறியப்பட்ட பித்தலேட்டுகளின் அளவுகளானது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏஜென்சியின் சுகாதார பாதுகாப்பு வரம்புகளை விடக் குறைவாகவே உள்ளன.
மிகவும் பிரபலமான உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவு பொருட்கள், நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இந்த ஆய்வின் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளது, சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.


Also Read | அரிசி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR