Benefits Of Rice: அரிசி சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லதல்ல என்று பலர் கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால் அது ஒரு தவறான கருத்து. அரிசியை முற்றிலுமாக தவிர்ப்பது ஆரோக்கியமானது அல்ல என்று சமீபத்தில் ஒரு ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சுவையான உணவு மற்றும் நமக்கு மிகவும் பழக்கமான உணவு என்பதை கடந்து அரிசியில் (Rice) பல்வேறு சத்துக்கள் உள்ளன. பல விதமான நம்முடைய உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கு அரிசியில் உள்ள பல குணங்கள் உதவுகின்றன. எனவே அரிசி உணவால் நம்முடைய உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
Also Read | நடுத்தர வயதினரிடையே அதிகரிக்கும் “Stress Fracture”; அதிக உடற்பயிற்சி காரணமா..!!!
* அரிசி ஒரு ப்ரீபயாட்டிக் தானியம். அரிசி உணவுகள் என்பது நமக்கான உணவாக மட்டுமன்றி, உடலிலுள்ள நல்ல நுண்ணுயிரிகளுக்கும் உணவாக அமைகிறது.
* அரிசியை எல்லா விதமான காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் இறைச்சிகளுடன் சேர்த்து சுவையாக சமைக்கலாம். காய்கறியுடன் சேர்த்து சமைத்து உண்ணும் போது உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களும் கிடைக்கும்.
* அரிசி சோறு என்பதைத் தவிர்த்து பாலீஷ் செய்யப்படாத அரிசியில் பி வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. எல்லா வயதினருக்கும் அரிசி சாதம் மிகவும் எளிதாக செரிமானமாகும்.
* அரிசி உணவு சாப்பிடும் போது நமக்கு வயிறு நிறைய உணவு உண்ட தான ஒரு உணர்வை ஏற்படுத்தும். அடிக்கடி பசிக்கும் உணவு தோன்றாது.
* முடி உதிர்தல் புகார் இருந்தால் கண்டிப்பாக அரிசி சாப்பிட வேண்டும். ஏனெனில் இது முடியை பராமரிக்கவும், முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் என்று கூறப்படுகிறது.
Also Read | Weight Management: உங்கள் உணவில் எவ்வளவு கலோரி இருக்கிறது தெரியுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR