Beauty Tips: மருக்களை நீக்க எளிய இயற்கையான வழிமுறை

மருக்களால் பிரச்சனையா? சில சுலபமான வீட்டு வைத்திய முறைகளை கடைபிடித்து பயனடையலாம். பலன் சற்று மெதுவாக கிடைத்தாலும், தீர்வு நிரந்தரமானதாக இருக்கும்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 27, 2021, 11:31 PM IST
  • மருக்களை நீக்க இயற்கையான வழிமுறை
  • மாயம் செய்யும் வீட்டு மருந்துகள்
  • மாசு மருவற்ற மேனியைப் பெற டிப்ஸ்
Beauty Tips: மருக்களை நீக்க எளிய இயற்கையான வழிமுறை   title=

முகத்தில் மருக்கள் தோன்றுவதால் முகப்பொலிவு குறைவதாக கவலை ஏற்படுவது இயல்பான பிரச்சனையாகிவிட்டது. பலருக்கு முகம், கழுத்து அல்லது காதுகளுக்குப் பின்னால் மருக்கள் இருக்கும். மாசு மருவற்ற முகம் வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் ஆசையாக இருக்கிறது. உங்களுக்கும் மருக்கள் பிரச்சனையாக இருக்கிறதா?

மருக்களை தவிர்க்கும் சில சுலபமான வீட்டு வைத்திய முறைகளை கடைபிடித்து பயனடையலாம். பலன் சற்று மெதுவாக கிடைத்தாலும், தீர்வு நிரந்தரமானதாக இருக்கும்.
ஒரு துண்டு இஞ்சியை மரு உள்ள இடத்தில் தேய்த்து வருவது நல்ல பலன் கிடைக்கும். அல்லது இஞ்சியை தோல் சீவி பேஸ்ட் போல் அரைத்து மரு உள்ள இடத்தில் தடவி வரலாம். தொடர்ந்து 2 வாரங்களுக்கு இப்படி செய்து வந்தால், மருக்கள் தளர்ந்து, இயற்கையாகவே உதிர்ந்துவிடும்.

nature
அன்னாசிப் பழச்சாறு எடுத்து, அதனை மரு உள்ள இடத்தில் தேய்த்து 25 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். அதேபோல, வெங்காய சாற்றினைக் கொண்டு தேய்த்து வரும் வழக்கத்தைப் பின்பற்றினாலும் மருக்கள் மாயமாய் காணமல் போகும்.

இரவில் படுக்கும் முன், வெங்காயத் துண்டில் உப்பு தேய்த்து ஊற வைத்து, காலையில் எழுந்து பேஸ்ட் போல் அரைத்து, அதனை மரு உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவுவதும் பயனளிக்கும். மருக்களின் மீது கற்பூர எண்ணெய் தடவி வந்தால், காற்றில் கரையும் கற்பூரம் போல, மருக்களும் மாயமாகிவிடும்…

Also Read | கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க உதவும் உணவுகள்

கற்றாழையின் உட்புற சதையை எடுத்து, அதனுடன் சம அளவு எலுமிச்சை சாறை கலந்து, இந்தக் கலவையை மரு மீது படும்படு நன்றாக மசாஜ் செய்யவும். அதன்பிறகு, வெந்நீர் ஒத்தடம் கொடுத்து வர வேண்டும். தொடர்ந்து இப்படி செய்து வந்தாலும் மரு வலுவிழந்து விழுந்துவிடும். 

ஆப்பிள் சீடர் வினிகரும், மருவுக்கு மருந்தாக செயல்படும். மரு உள்ள இடத்தில், ஆப்பிள் சீடர் விந்னிகரை காட்டனில் நனைத்து தேய்த்து வந்தால், மரு, உங்கள் முகத்தை மறந்துவிடும்.பூண்டை இடித்து, அதை சாறு எடுத்துக் கொண்டு, அதனை மருக்கள் இருக்கும் இடத்தில் தடவி, காற்றுப் புகாமல் இருக்க ஒரு துணியால் முடி வைத்து, சுமார் அரை மணி நேரம் ஊற வைத்து கழுவி வந்தால், மருக்கள் நீங்கும்.   தினசரி மூன்று முறை இதை தொடர்ந்து செய்துவந்தால் பலன் விரைவில் தெரியும்.
 
அகத்தி கீரை சாற்றில் கடல் சங்கை இழைத்து மருக்கள் மீது தொடர்ந்து தடவிவந்தால் மரு உதிர்ந்து விடும். ஆளி விதையை அரைத்து, அதனுடன் சுத்தமான தேன் சிறிதளவு சேர்த்து இந்தக் கலவையை மருவின் மீது தடவி, காற்றுப் படமால் அரை மணி நேரம் வைக்கவும். இதை தொடர்ந்து செய்துவந்தாலும், மருக்கள் மறைந்துபோகும்.

Also Read | Hair Conditioner: தவறாக பயன்படுத்தினால் வழுக்கை ஏற்படலாம்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News