பச்சை காய்கறி ஜூஸ் நன்மைகள்: அனைத்து பருவத்திலும் ஃபிரெஷ் ஜூஸ் குடிப்பது நன்மை பயக்கும். பிறகு அது பழச்சாறாக இருந்தாலும் சரி அல்லது காய்கறி ஜூஸாக இருந்தாலும் சரி, இரண்டுமே உடலுக்கு நன்மை பயக்கும். சில நோய்களில், ஜூஸ் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைத் தருகிறது. மேலும், மாறிவரும் பருவத்தில் ஆரோக்கியத்தை பராமரிப்பதும் என்பது சவாலான விஷயமாக உள்ளது. பொதுவாக கோடை காலத்தில் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மறுபுறம், சர்க்கரை அளவு அதிகரிப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் பிரச்சனைகள் உள்ளவர்கள், பச்சை மற்றும் ஃபிரெஷ் காய்கறிகளின் குளிர்ந்த சாற்றையும் குடிக்க வேண்டும். எனவே எந்த காய்கறி சாறுகளை அதிகமாக உட்கொள்ளலாம் என்பதை இன்று நாம் காண உள்ளோம். அந்த காய்கறிகள் என்னவென்றும், அதன் ஜூஸை வீட்டிலேயே எப்படி எளிதாக தயார் செய்யலாம் என்பதையும் இனித கட்டுரையில் நாம் காண உள்ளோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 உயர் இரத்த அழுத்தம் அல்லது சர்க்கரை அதிகரிப்பு பிரச்சனை இருந்தால், இந்த பச்சை காய்கறிகளின் ஜூஸை எடுத்துக்கொள்ளலாம். 


1. சுரைக்காய் ஜூஸ்: பச்சைக் காய்கறிகளில், சுரைக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதன் சாற்றை வீட்டிலேயே செய்து குடித்தால் பல நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும். இந்த ஆரோக்கியமான சாறு சுவையில் மோசமாக இருக்கலாம், ஆனால் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு இது ஒரு சஞ்சீவி. இந்த ஜூஸை குடிப்பதால் கோடையில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு பிரச்சனையும் குறையும்.


மேலும் படிக்க | Green Tea குடிக்கும்போது இந்த தவறுகளை மட்டும் செஞ்சிடாதீங்க


2. பாகற்காய் ஜூஸ்: பாகற்காய் சர்க்கரை நோய்க்கு எதிரி. எனவே சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக பாகற்காய் சாறு குடிக்க வேண்டும். இதை ணாம் வீட்டிலேயே எளிதாக செய்யலாம். இதன் மூலம், உங்கள் இரத்த சர்க்கரையை எளிதில் கட்டுப்படுத்தலாம். அதுமட்டுமின்றி, பாகற்காய் சாறு வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் குணப்படுத்துகிறது. அத்துடன் பாகற்காய் தோல் பிரச்சனைகளுக்கும் நன்மை பயக்கும். இந்த சாறு உங்கள் உடலை நச்சுத்தன்மையாக்க உதவுகிறது.


3. தக்காளி ஜூஸ்: தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைத் தருகிறது. வீட்டில் தக்காளி ஜூஸ் செய்து குடித்து வந்தால், சருமம் தொடர்பான பல பிரச்சனைகள் நீங்கும். உண்மையில், இதில் நிறைய வைட்டமின்கள் உள்ளன, இது பசியின்மை, மலச்சிக்கல் மற்றும் வாயு போன்ற தோல் மற்றும் வயிறு தொடர்பான நோய்களின் பிரச்சனையை நீக்குகிறது.


4. வெள்ளரி ஜூஸ்: கோடைக்காலம் வந்தாலே சந்தையில் வெள்ளரிகள் வரத்து அதிகமாகும். வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும். வெள்ளரிக்காய் ஆரோக்கியமாக இருப்பதைத் தவிர, உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். இதன் சாற்றை தினமும் குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குவதோடு, உயர் இரத்த அழுத்தத்தமும் கட்டுப்பாட்டில் இருக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Health Tips: என்னங்க சொல்றீங்க..!இந்த 5 காய்கறிகளை அதிகம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ