இந்த பச்சை நிறப் பழத்தில் இத்தனை நன்மைகள் இருக்கிறதா? கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Benefits of Kiwi: கிவியின் சுவை பலரையும் அதன் பக்கம் ஈர்க்கிறது, ஆனால் இந்த பழத்தை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்று தெரியுமா?
கிவி பழத்தின் அற்புத ஆரோக்கிய நன்மைகள்: கிவி என்பது ஆண்டு முழுவதும் சந்தையில் எளிதாகக் கிடைக்கக் கூடிய ஒரு பழமாகும், இதை ஒரு சூப்பர்ஃபுட் பிரிவில் வைக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இந்த பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன, அவை உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாகும். கிவி பழத்தின் தோல் பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். மேலும் சந்தையில் அதன் விலை மற்ற பல பழங்களை விட சற்று அதிகமாக இருந்தாலும், அதை வாங்கி சாப்பிடுவது உங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தாது. இதில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது, இது உடலின் நோய் எதிர்ப்புக்கு நல்லது மற்றும் ஜலதோஷத்தைத் தடுக்க உதவுகிறது. கிவியில் அதிகளவு நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளது. வாருங்கள் இப்போது இதன் பிர நன்மைகள் என்னவென்று விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
கிவியில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள்
கிவியில் உள்ள கலோரிகளின் அளவு மிகவும் குறைவு, யார் ஒருவர் தங்களின் ஃபிட்டனஸ் சிறப்பு கவனம் செலுத்துகின்றாரோ அவர்கள் கட்டாயம் கிவி பழத்தை சாப்பிட வேண்டும். இந்த பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது நம் உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். அதேபோல் ஒரு நடுத்தர கிவி பழம், வைட்டமின் சி (தினசரி மதிப்பில் 23%) உணவு நார் (6 கிராம்)(15% DV) பொட்டாசியம் (19% DV), கால்சியம் (9% DV), மெக்னீசியம் (8% DV) கொண்டுள்ளது.
மேலும் படிக்க | மூளையை பலவீனமாக்கும் விட்டமின் B12 குறைபாடு! தவிர்க்க சாப்பிட வேண்டியவை!
கிவி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
1. இதய நோய் உள்ளவர்கள் அடிக்கடி கிவி சாப்பிடுவது நல்லது. இது மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது.
2. உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தால் கண்டிப்பாக கிவி பழத்தை சாப்பிடவும். இது பிபி கட்டுக்குள் வைத்திருக்கும்.
3. கலோரிகள் குறைவாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு தீங்கு ஏற்படுத்தாது. இது சர்க்கரை அளவை குறைக்க உதவும்.
4. கிவி சாப்பிடுவதன் மூலம், உடலின் நச்சுகள் வெளியேறத் தொடங்குகின்றன, அதன் நேர்மறையான விளைவு நம் தோலில் தென்படும்.
5. கிவியை தொடர்ந்து உட்கொள்வதால் சருமத்தில் அற்புதமான பளபளப்பு பெற்று மற்றும் சுருக்கங்கள் மறையும்.
6. வயிற்றில் பிரச்சனை உள்ளவர்கள் கிவியை தவறாமல் சாப்பிட வேண்டும்.
7. கிவி வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தவும் உதவும்.
8. கிவியில் ஏராளமான இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளது, இது கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை பயக்கும்.
9. கிவி சாப்பிடுவது நமது எலும்புகளுக்கும் நன்மை பயக்கும், இது மூட்டு வலியை நீக்குகிறது.
10. மன உளைச்சலால் அவதிப்படுபவர்கள் மன அழுத்தத்தைக் குறைக்க கிவி பழத்தை சாப்பிட வேண்டும்.
11. கிவி நமது நோய் எதிர்ப்பு சக்தியை மிகவும் அதிகரிக்கிறது, இது பல நோய்கள் மற்றும் தொற்றுநோய்களின் அபாயத்தை குறைக்கிறது.
12. கிவி பழம் ஒரு சிறந்த செரிமான உதவி. இது பித்த உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்துகிறது.
13. கிவி பழத்தில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் இருப்பதால் எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. ஆரோக்கியமான பற்களை உருவாக்க கால்சியம் அவசியம்.
14. கிவி பழம் சில புற்றுநோய்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு ஐந்து முறைக்கு மேல் பச்சையாக கிவி பழத்தை உட்கொள்ளும் பெண்களுக்கு, மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
15. பழுத்த கிவி பழத்தை உட்கொள்வது அல்லது புதிய கிவி பழச்சாறுகளை ஜூஸ் செய்வது வயதான அறிகுறிகளைக் குறைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | குழந்தையின் மூளை கம்ப்யூட்டரை போல் இயங்க வைக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ