யூரிக் அமிலம் திடீரென அதிகரிப்பதால் பிரச்சனையா: இந்த வீட்டு வைத்தியங்கள் உதவும்
Uric Acid Problem: யூரிக் அமிலத்தின் பிரச்சனை மிகவும் பொதுவானதாகிவிட்டது. நம்மைச் சுற்றியுள்ள பலர் அதை எதிர்கொள்கின்றனர்.
யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி: யூரிக் அமிலத்தின் பிரச்சனை மிகவும் பொதுவானதாகிவிட்டது. நம்மைச் சுற்றியுள்ள பலர் அதை எதிர்கொள்கின்றனர். இதனால் கால்களில் வீக்கமும், விறைப்பும் ஏற்பட்டு, நடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இதைத் தவிர்க்க, நம் அன்றாட உணவு முறையிலும், வாழ்க்கை முறையிலும் மாற்றங்களைச் செய்ய வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், பிரச்சனை அதிகரிக்கலாம. அதோடு, வழக்கமான உடற்பயிற்சியின் மூலமும் நிவாரணத்தை எதிர்பார்க்கலாம். இவற்றை தவிர யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துவதற்கான சில எளிய வீட்டு வைத்தியங்களும் உள்ளன.
யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த வீட்டு வைத்தியம்
1. உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க வெண்டும்
தண்ணீர் குடிப்பது நல்ல ஆரோக்கியத்தின் முதல் படியாகும். உங்கள் உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போதெல்லாம், தண்ணீர் உட்கொள்ளலை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் து நமது சிறுநீரகங்களுக்கு உடலின் நச்சுகளை வடிகட்ட உதவி கிடைக்கும். பல சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியமாகும்.
2. ஓமத் தண்ணீர் குடிக்கவும்
ஓமம் உணவின் சுவையை அதிகரிக்க நாம் பயன்படுத்தும் ஒரு மசாலா ஆகும். எனினும், இதில் பல வித மருத்துவ குணங்களும் உள்ளன. இதன் மூலம் யூரிக் அமிலத்தையும் கட்டுப்படுத்தலாம். இது மற்ற வயிற்று பிரச்சனைகளை நீக்கவும் உதவுகிறது.
மேலும் படிக்க | மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் இந்த உணவுகள் வேண்டாமே...
3. ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தவும்
ஆலிவ் எண்ணெயின் நன்மைகள் பற்றி நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். இது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது தவிர, உங்கள் யூரிக் அமிலம் அதிகரித்திருந்தால், ஆலிவ் எண்ணெயை சாப்பிடுவதன் மூலம் இயற்கையாகவே அதை குறைக்கலாம்.
4. போதுமான தூக்கம் தேவை
நல்ல ஆரோக்கியத்திற்கு, ஒருவர் 7 முதல் 8 மணிநேரம் தூங்குவது அவசியமாகும். தூக்கமின்மை பல பிரச்சனைகளுக்கு மூல காரணமாக அமைகிறது. ஆனால் குறைவான தூக்கத்தால் யூரிக் அமிலமும் அதிகரிக்கிறது என்பது பலருக்குத் தெரியாது. எனவே போதுமான அளவு தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
(பொறுபுத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | பார்லியில் உள்ளன எக்கச்சக்க ஆரோக்கிய நன்மைகள்: முழு விவரம் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR