சிலருக்கு எப்போது பார்த்தாலும் தூக்கம் வந்து கொண்டே இருக்கும். வேலை செய்யும்போது, படம் பார்க்கும்போது என அவர்கள் எதைச் செய்தாலும் தூக்கம் முன் வந்து நிற்கும். இது எதனால்? என நீங்கள் யோசித்துக் கொண்டிருந்தீர்கள் என்றால், இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவியாக இருக்கும். ஒருவருக்கு தூக்கம் வருவதற்கு முழு முதற்காரணம், உங்கள் உடலுக்கு தேவையான போதுமான உறக்கத்தை நீங்கள் கொடுக்கவில்லை. அதாவது ஓய்வெடுக்கவில்லை என்பது அர்த்தம்.
மேலும் படிக்க | Summer Tips: கோடையில் இந்த காயை சாப்பிட்டால் போதும், கோடை கூலாக கழியும்
அதனால் ஒரு நாளைக்கு 8 முதல் 9 மணி நேரம் தூங்குவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். வயதுக்கு ஏற்றார்போல் தூக்கம் என்பது அவசியம். அதிகமாக வேலை செய்திருந்தால்கூட உங்களுக்கு தூக்கம் வரும். ஆனால், வேலையே செய்யாமல் உங்களுக்கு தூக்கம் வந்து கொண்டே இருக்கிறது என்றால், ஆரோக்கிய குறைபாடு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
மன அழுத்தம், உணவு முறை, உடற்பயிற்சியின்மை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை நீங்கள் சரியாக பின்பற்றியிருக்க மாட்டீர்கள். நாள்தோறும் சரியாக உடற்பயிற்சி செய்யுங்கள். மன அழுத்தம் இருந்தால் யோகா மற்றும் தியானத்தை பின்பற்றுங்கள். ஆஃபீஸில் இருக்கும்போது தூக்கம் வந்தால், எழுந்து சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும்போது மூளை சுறுசுறுப்பாக செயல்படும்.
எண்ணெய் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்த உணவுகள் உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தி தூக்கத்தை வரவழைக்கும். காய்கறி மற்றும் பழங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். ஒரே நாளில் எல்லாம் மாறிவிடாது. தினம்தோறும் நீங்கள் சரியான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியை பின்பற்றி வந்தால், சீரான இடைவெளியில் உங்களின் தூக்கம் வரும் பிரச்சனை முடிவுக்கு வரும்.
மேலும் படிக்க | Men's Health: ஆண்கள் பூசணி விதிகளை கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR