மோசமான வாழ்க்கை முறையும், தவறான உணவு முறையும் நம்மை அறியாமலேயே பல நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது. நேரத்துக்குத் தூங்குவதும் இல்லை, எழுவதும் இல்லை, நேரத்துக்குச் சாப்பிடுவதும் இல்லை, இதனால் பல நோய்களுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. யூரிக் அமிலம் அதிகரிப்பதும் தவறான உணவுப் பழக்கத்தால் ஏற்படும் பிரச்சனையாகும். பியூரின் எனப்படும் புரதங்களின் அதிகப்படியான காரணமாக உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கிறது.
மேலும் படிக்க | உடற்பயிற்சி செய்வதற்கு முன் என்ன செய்யலாம்? எதை தவிர்க்கலாம்?
உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால் மூட்டு வலி, உட்காருவதில் சிரமம், விரல்களில் வீக்கம் என பல வகையான பிரச்சனைகள் உடலில் ஏற்படும். யூரிக் அமிலம் உருவாகும்போது, இந்த அமிலத்தின் சிறிய துண்டுகள் மூட்டுகள், தசைகள் மற்றும் திசுக்களில் படிகங்களின் வடிவத்தில் குவிந்துவிடும். யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த எலுமிச்சை சாறு போதுமான தீர்வை கொடுக்கும்.
எலுமிச்சை சாறு யூரிக் அமிலத்தை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது?
எலுமிச்சை சாறு யூரிக் அமில அளவை சமப்படுத்த உதவுகிறது, ஏனெனில் இது உடலை அதிக காரத்தன்மையுடன் மாற்ற உதவுகிறது. இதன் பொருள் இரத்தம் மற்றும் பிற திரவங்களின் pH அளவை எலுமிச்சை சற்று உயர்த்துகிறது. ஒரு ஆய்வின் படி, எலுமிச்சை சாறு குடிப்பதால், உங்கள் உடலில் கால்சியம் கார்பனேட் அதிகமாக வெளியிடப்படுகிறது. இவை யூரிக் அமிலத்துடன் பிணைந்து, அதை நீர் மற்றும் பிற சேர்மங்களாக உடைக்கிறது. இதன் மூலம் இரத்தத்தில் அமிலத்தன்மை குறைந்து, உடலில் யூரிக் அமில அளவும் குறைகிறது.
எலுமிச்சை பயன்படுத்தும் முறை
• யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த, ஒரு நாளைக்கு இரண்டு முறை எலுமிச்சை சாறு குடிக்கலாம். எலுமிச்சை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது, யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துகிறது.
• யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த, வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைச் சாறு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடலாம். வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சையை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் யூரிக் அமிலம் கட்டுப்படும். வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை, செரிமானத்தை சரியாக வைத்து, எடையையும் கட்டுப்படுத்துகிறது.
மேலும் படிக்க | அதிக கொழுப்பால் உடலில் பிரச்சனையா? இந்த 5 பானங்கள் உங்களுக்கு கை கொடுக்கும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR